வாபஸ் பெறப்பட்டுள்ள வேளாண் சட்டங்களும்.. விவசாயிகளின் போராட்டங்களும்..! கடந்து வந்த பாதை!

வாபஸ் பெறப்பட்டுள்ள வேளாண் சட்டங்களும்.. விவசாயிகளின் போராட்டங்களும்..! கடந்து வந்த பாதை!
வாபஸ் பெறப்பட்டுள்ள வேளாண் சட்டங்களும்.. விவசாயிகளின் போராட்டங்களும்..! கடந்து வந்த பாதை!
Published on

சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதையடுத்து வேளாண் சட்டங்கள் கடந்து வந்த பாதை குறித்து பார்ப்போம்.

வேளாண் சட்டங்கள் ஒரு டைம்லைன்:

ஜீன் 5, 2020 - மத்திய அரசால் 3 வேளாண் சட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

செப்டம்பர் 14, 2020 - வேளாண் சட்டங்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

செப்டம்பர் 17, 2020 - 3 சட்டங்களும் மக்களவையில் நிறைவேற்றம்

செப்டம்பர் 20, 2020 - குரல் வாக்கெடுப்பு மூலம் ராஜ்யசபாவில் நிறைவேற்றம்

செப்டம்பர் 24, 2020 - பஞ்சாப் விவசாயிகள் 3 நாள் ரயில் மறியல் அறிவிப்பு

செப்டம்பர் 24, 2020 - நாடு முழுவதும் போராட்டத்தில் இறங்கிய விவசாயிகள்

செப்டம்பர் 27, 2020 - ஜனாதிபதி ஒப்புதல் பெற்று, அரசிதழில் வெளியீடு

நவம்பர் 25, 2020 - நாடு தழுவிய போராட்டத்துக்கு அழைப்பு; டெல்லியில் போராட்டத்தை தொடங்கிய லட்சகணக்கான விவசாயிகள்

நவம்பர் 26, 2020 - டெல்லியை நோக்கி பேரணியாக படையெடுத்த விவசாயிகள்; போலீசார் தாக்குதலால் வன்முறை

நவம்பர் 28, 2020 - போராட்டத்தை கைவிட கோரி விவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்த உள்துறை அமைச்சர் அமித்ஷா

டிசம்பர் 3, 2020   - விவசாயிகளுடனான அரசின் முதல் சுற்று பேச்சுவார்த்தை தோல்வி

டிசம்பர் 5, 2020    - இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி

டிசம்பர் 8, 2020      - மற்ற மாநில விவசாயிகளை 'பார்த் பந்த்' போராட்டத்துக்கு அழைப்பு

டிசம்பர் 9, 2020      - வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை போராட்டம் தொடரும் என அறிவிப்பு

டிசம்பர் 11,2020     - உச்சநீதிமன்றத்தை நாடிய பாரத் கிசான் யூனியன் அமைப்பு

டிசம்பர் 21,2020      - நாடு தழுவிய ஒருநாள் உண்ணாவிரத போராட்டத்தில் விவசாயிகள்

டிசம்பர் 30,2020        - அரசுடன் விவசாயிகள் நடத்திய ஆறாம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி

2021ம் ஆண்டு நிகழ்ந்தவை 

ஜனவரி 4 , 2021  - 7ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி

ஜனவரி 11, 2021 - விவசாயிகள் போராட்டம் குறித்து மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்; முன்னாள் நீதிபதி தலைமையில் குழு

ஜனவரி 12, 2021  - வேளாண்சட்டங்களுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை

ஜனவரி 26, 2021   - குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் வெடித்த வன்முறை

பிப்ரவரி 5, 2021   - விவசாயிகள் போராட்டத்தில் டூல் கிட் பயன்படுத்தியதாக தேசத்துரோக வழக்குபதிவு

மார்ச் 6, 2021     - டெல்லி எல்லையில் விவசாயிகள் 100நாள் போராட்டம்

ஆகஸ்ட் 28, 2021 - தேசிய நெடுஞ்சாலைகளில் நடந்த போராட்டத்தில் தடியடி

அக்டோபர் 3, 2021 - லக்கிம்பூர் கேரி வன்முறை; 9 பேர் பலி

அக்டோபர் 18, 2021 - லக்கிம்பூர் கேரி வன்முறைக்கு எதிராக ரயில் மறியல் அறிவிப்பு

நவம்பர் 19, 2021 - 3 வேளாண் சட்டங்களும் வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அறிவிப்பு 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com