சாலைக்கு கிரிக்கெட் வீரர் சேத்தன் சவுகானின் பெயர் - உ.பி அரசு அறிவிப்பு

சாலைக்கு கிரிக்கெட் வீரர் சேத்தன் சவுகானின் பெயர் - உ.பி அரசு அறிவிப்பு
சாலைக்கு கிரிக்கெட் வீரர் சேத்தன் சவுகானின் பெயர் - உ.பி அரசு அறிவிப்பு
Published on

முன்னாள் அமைச்சரும், கிரிக்கெட் வீரருமான சேத்தன் சவுகானை நினைவுகூறும் விதமாக அவர் பெயரை ஒரு சாலைக்கு வைக்கவுள்ளதாக உத்தர பிரதேச மாநிலத்தின் துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா அறிவித்துள்ளார்.

சேத்தனின் மறைவுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும், அவர் பெயரை ஒரு சாலைக்கு வைப்பதன்மூலம் இப்போது இருக்கிற மற்றும் வருங்கால சந்ததிகள் அவரை நினைவுகூறும் என்றும் மவுரியா கூறியுள்ளார்.

சேத்தன் சவுகான் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குருகிராமில் உள்ள மேடந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தனது 73 வயதில் ஆகஸ்ட் 16ஆம் தேதி மரணமடைந்தார்.

சவுகான் சிவில் பாதுகாப்பு மற்றும் பிராந்தியா ரக்‌ஷக் தால் போன்றவற்றின் உத்திர பிரதேச அமைச்சராக இருந்தார். இவர் 1970களில் இந்திய கிரிக்கெட் அணியில் முக்கிய வீரர்களில் ஒருவர். சுனில் கவாஸ்கருடன் ஓபனிங் பேட்ஸ்மேனாக களம் இறங்கியவர். சர்வதேச கிரிக்கெட்டுகளில் சதம் எடுக்காமலேயே 2000க்கும் மேற்பட்ட ரன்களை எடுத்த வீரர்களில் சவுகானும் ஒருவர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com