கோவாக்சின் தடுப்பூசியாலும் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பு; புதிய ஆய்வில் வெளிவந்த தகவல்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அதை தயாரித்த அஸ்ட்ரோ ஜெனிகா நிறுவனம் தெரிவித்துள்ள நிலையில், கோவாக்சின் தடுப்பூசியாலும் பிரச்சனைகள் ஏற்படுவது புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
தடுப்பூசி
தடுப்பூசிpt web
Published on

9 அஸ்ட்ராஜெனெகா நிறுவனத்தின் கோவிஷீல்டு என்ற கொரோனா தடுப்பூசியால் கடுமையான பாதிப்புகளும், பக்கவிளைவுகளும் ஏற்பட்டுள்ளதாக கடந்த காலங்களில் இங்கிலாந்து உயர்நீதிமன்றத்தில் 51 வழக்குகள் தொடரப்பட்டன.

கோவிட் மருந்து
கோவிட் மருந்துPT

இவ்வழக்குகளின் விசாரணையின்போது, கோவிஷீல்டை தயாரித்த அஸ்ட்ராஜெனெகா நிறுவனம், “எங்கள் நிறுவன கொரோனா தடுப்பூசி மிக மிக அரிதாக சிலருக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தும்” என இங்கிலாந்து உயர்நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டிருந்தது. இது உலகம் முழுக்க மக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இதனை ஒட்டி பல்வேறு மருத்துவர்களும் விளக்கமளித்திருந்தனர். மக்கள் பயப்படுவதுபோல் அத்தனை பெரிய பாதிப்புகள் இருக்காது என்றும் கோவிஷீல்டு தடுப்பூசி காரணமாக 10 லட்சத்தில் 7 பேர் மட்டுமே ரத்த உறைவு அபாயத்தை எதிர்கொள்ள நேரிடும் என்றும் தெரிவித்திருந்தனர். அதேசமயத்தில் தடுப்பூசிகளே கொரோனா காலக்கட்டத்தில் உயிர்களைக் காப்பாற்றியது என்றும் தெரிவித்து இருந்தனர்.

தடுப்பூசி
“இப்படியே போனா பந்துவீச ஆட்களே இருக்க மாட்டாங்க!” - ஐபிஎல்லின் போக்கு குறித்து அனில் கும்ளே வருத்தம்

இந்நிலையில், கோவாக்சின் தடுப்பூசியாலும் பிரச்சனைகள் ஏற்படுவது புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. கோவாக்சின் தடுப்பூசியை பயன்படுத்தியவர்களுக்கு பக்க விளைவு ஏற்பட்டுள்ளது என்பது பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தின் மருத்துவர் சங்க சுப்ரா சக்ரபர்தி மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ஜனவரி 2022 முதல் ஆகஸ்ட் 2023 வரை ஒரு வருட காலம் கோவாக்சின் தடுப்பூசியை பயன்படுத்திய 1024 நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 40% மேற்பட்டோருக்கு சுவாச நோய்கள் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. தோல் நோய்கள் 10.5 சதவீதம் பேருக்கும், நரம்பு மண்டலக் கோளாறுகள் 4.7 சதவீதம் பேருக்கும் ஏற்பட்டுள்ளது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அதை தயாரித்த அஸ்ட்ரோ ஜெனிகா நிறுவனம் தெரிவித்துள்ள நிலையில், கோவாக்சின் தடுப்பூசியாலும் பிரச்சனைகள் ஏற்படுவது புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

தடுப்பூசி
“பக்கவிளைவையும் நன்மையையும் சேர்த்து புரிஞ்சுக்கணும்”-கோவிஷீல்டு தடுப்பூசிகுறித்து முதுநிலை விஞ்ஞானி

இருப்பினும், தடுப்பூசிகளை பொறுத்தவரை நமக்கு கிடைத்துள்ள நன்மைகளை பொறுத்துத்தான் பக்கவிளைவுகளை மதிப்பீடு செய்ய வேண்டும் என்றும் அப்படி பார்த்தால் அதிக அளவிலான நன்மைகளே தடுப்பூகளால் கிடைத்துள்ளன என்றும் மருத்துவர்கள் பலரும் தெரிவித்து வருகின்றனர்.

தடுப்பூசி
9 வயது மகளை கொடூரமாக தாக்கிய தாய்| வீடியோ எடுத்த தந்தை.. போலீஸில் புகார்! #Viralvideo

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com