முத்தலாக் சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு 

முத்தலாக் சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு 
முத்தலாக் சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு 
Published on

முத்தலாக் சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கேரள இஸ்லாமிய அமைப்பு ஒன்று வழக்குத் தொடர்ந்துள்ளது. 

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் முத்தலாக் சட்ட மசோதாவை மத்திய அரசு  நிறைவேற்றியுள்ளது. இந்தச் சட்டத்தின் மூலம் இஸ்லாமிய பெண்களை தலாக் கூறி விவாகரத்து செய்யும் கணவர்களுக்கு மூன்று ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் அபராதம் ஆகியவை வழங்க முடியும். எனவே இந்த விவாகரத்திற்கு சிறைத் தண்டனை அளிப்பதற்கு இஸ்லாமிய அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  

இந்நிலையில் முத்தலாக் சட்டத்திற்கு எதிராக கேரளாவைச் சேர்ந்த இஸ்லாமிய அமைப்பு வழக்குத் தொடர்ந்துள்ளது. கேரளாவை சேர்ந்த சமஸ்தா கேரளா ஜாமியதுல் உலமா (Samastha Kerala Jamiathul Ulema) என்ற அமைப்பு உச்சநீதிமன்றத்தில் மனுவைத் தாக்கல் செய்துள்ளது. 

அதில், “இஸ்லாமிய பெண்களின் திருமண பாதுகாப்புச் சட்டம் அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை மீறும் விதமாக உள்ளது. அதாவது இந்தச் சட்டம் அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 14,15 மற்றும் 21 ஆகியவற்றை மீறும் வகையில் இருக்கிறது. ஆகவே இச்சட்டத்தை ரத்து செய்யவேண்டும். அத்துடன் வழக்கு விசாரணை முடியும் வரை இதனை அமல்படுத்த தடை விதிக்கவேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com