எல்ஐசி நிறுவனத்தில் அரசுக்கு உள்ள பங்குகளின் ஒரு பகுதி தனியாருக்கு புதிய பங்கு வெளியீடு மூலம் விற்பனை செய்யப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
2020-2021 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அப்போது பேசிய அவர் எல்ஐசி நிறுவனத்தில் அரசுக்கு உள்ள பங்குகளின் ஒரு பகுதி, தனியாருக்கு புதிய பங்கு வெளியீடு மூலம் விற்பனை செய்யப்படும் என்றார். முன்னதாக பேசிய நிர்மலா சீதாராமன், “ வங்கிகளில் வாடிக்கையாளர்களின் பணம் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். வங்கிகளில் பணம் டெபாசிட் செய்யும்போது மேற்கொள்ளும் காப்பீடு ரூ.1 லட்சத்தில் இருந்து ரு.5 லட்சமாக உயர்த்தப்படும்” என்றார்.
மேலும், வங்கிகள் திவாலானால் வைப்புத்தொகையில் இருந்து அதிகப்பட்சமாக ரூ.5 லட்சம் வழங்கப்படும். மேலும் மத்திய அரசிடம் உள்ள ஐடிபிஐ வங்கிகளின் பங்குகளும் விற்பனை செய்யப்படும் என தெரிவித்தார்.