கொரோனாவால் இறந்து 6 நாட்களாக பிணவறையில் கிடந்த மூதாட்டிக்கு இறுதிச்சடங்கு செய்த இஸ்லாமியர்

கொரோனாவால் இறந்து 6 நாட்களாக பிணவறையில் கிடந்த மூதாட்டிக்கு இறுதிச்சடங்கு செய்த இஸ்லாமியர்
கொரோனாவால் இறந்து 6 நாட்களாக பிணவறையில் கிடந்த மூதாட்டிக்கு இறுதிச்சடங்கு செய்த இஸ்லாமியர்
Published on

உத்தரபிரதேசத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 70 வயது ஹிந்து மூதாட்டி ஒருவருக்கு இறுதிச்சடங்கு செய்துள்ளார் இஸ்லாமியர் ஒருவர். அந்த மூதாட்டி உயிரிழந்து ஆறு நாட்கள் கடந்த நிலையில், பிணவறையில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலை யாருமே வாங்க முன்வராததால் இதனை அந்த இஸ்லாமியர் செய்துள்ளார். 

“அந்த மூதாட்டியின் பெயர் சுனிதா தேவி. இந்த பகுதியில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில் வாழ்ந்து வந்தார். கடந்த ஏப்ரல் 5 அன்று மூச்சு திணறல் அறிகுறியுடன் அவசர உதவி வேண்டி மருத்துவமனையை நாடினார். அவரை பரிசோதித்ததில் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. தொடர்ந்து சிகிச்சை கொடுத்தும் பலன் அளிக்காமல் உயிரிழந்தார்” என அவருக்கு சிகிச்சை அளித்த சஜஹபூர் மாவட்ட மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

உயிர் இழந்து ஆறு நாட்கள் ஆகியும் மூதாட்டியின் உடலை கேட்டு யாருமே முன்வராத காரணத்தினால் உள்ளூர் பத்திரிகையாளரான மெராஜுதீன் கான் மூதாட்டிக்கு இறுதிச்சடங்கு செய்ய முடிவு செய்துள்ளார். அவருக்கு ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பீரு உதவ மூதாட்டிக்கு சடங்குகளை அவர் செய்துள்ளார் என தெரிகிறது. 

இந்த சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் பகுதியில் நடந்ததாக சொல்லப்படுகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com