’லவ்வரோட அப்பா போட்ட கண்டிஷன்..’ சுவாரஸ்ய பதிவுடன் வேலை கேட்டு விண்ணப்பித்த நபர்.. #Viral

வேலைக்காக, விண்ணப்பத்தாரர் ஒருவர் சொன்ன கருத்து, இணையத்தில் வைரலாகி வருகிறது.
viral photo
viral photox page
Published on

எல்லோருக்கும் இன்று நினைத்தபடி வேலை கிடைப்பதில்லை. காரணம், போட்டி, கலவித்தகுதி, திறமை மற்றும் அனுபவம், சிபாரிசு என பல முக்கிய அம்சங்கள் அதில் உள்ளடங்கி இருக்கின்றன. இதில் வெற்றிபெறுபவர்களே வேலைக்குத் தேர்வு செய்யப்படுகின்றனர். ஆனால், இவற்றை எல்லாம் தவிர்த்துவிட்டு, விண்ணப்பத்தாரர் ஒருவர் சொன்ன கருத்து, இணையத்தில் வைரலாகி வருகிறது.

அர்வா ஹெல்த் Arva Health என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் நிறுவனருமான டிப்பாலயே பஜாஜா, தங்கள் நிறுவனத்திற்கு ஃபுல் ஸ்டேக் இன்ஜினியர் (full stack engineer) பணிக்கு ஆட்கள் தேவை என விளம்பரம் செய்திருந்தார்.

இதைப் பார்த்து பலரும் விண்ணப்பித்திருந்தனர். அதில் ஒரு விண்ணப்பத்தாரரும், இந்த வேலைக்கு விண்ணப்பித்திருந்தார். அவர், ’நீங்கள் ஏன் இந்த பணிக்கு பொருத்தமானவர் என நினைக்கிறீர்கள்’ என்ற கேள்விக்கு சுவாரஸ்யமாகப் பதிலளித்துள்ளார்.

”இந்த வேலை எனக்கு கிடைக்கவில்லை என்றால், நான் என்னுடைய சிறுவயது காதலியை திருமணம் செய்துகொள்ள முடியாது. ஏனெனில், உனக்கு வேலை இருந்தால் மட்டுமே நான் பெண் கொடுப்பேன் என என் காதலியின் தந்தை கூறுகிறார்” என தெரிவித்துள்ளார். அவருடைய இந்தப் பதிவுதான் இணையத்தில் வைரலாகி வருகிறது. அவரது இந்த பதிவு ஆயிரக்கணக்கானவர்களின் கவனத்தையும், நூற்றுக்கணக்கானவர்களையும் பின்னூட்டங்களையும் பெற்றுள்ளது.

இதையும் படிக்க: ஆந்திரா| ஆட்டம் ஆரம்பம்.. ஜெகன் வீடு முன்பு இருந்த ஆக்கிரமிப்பு கட்டடங்கள்.. இடித்த கார்ப்பரேஷன்!

viral photo
’lover’ பட பாணி|தினமும் 100 முறை போன் செய்த காதலி.. டார்ச்சர் தாங்க முடியாமல் போலீஸிடம் ஓடிய காதலன்!

ஒரு பயனர், ’அவருடைய நேர்மையை பாராட்டி இந்த வேலையை நீங்கள் வழங்க வேண்டும்’ எனக் கேட்டுக் கொண்டுள்ளார். மற்றொரு பயனர், ’தயவுசெய்து அவருக்கு வேலை கொடுங்கள்; இதனால் அவரது வாழ்க்கையும் முன்னேறும்’ என தெரிவித்துள்ளார். ஆனால் இந்த வேலை அந்த நபருக்கு வழங்கப்பட்டதா, அவர் நேர்காணல் செய்யப்பட்டாரா என்பது குறித்த விவரங்களை அந்த நிறுவனம் வெளியிடவில்லை.

அர்வா ஹெல்த் என்பது ஒரு ஹெல்த் கேர் ஸ்டார்ட் அப் நிறுவனம் ஆகும். இது பெண்களுக்கு வீட்டிலேயே கருவுறுதல் சோதனைகளை செய்யும் வசதிகளை வழங்குகிறது.

இதையும் படிக்க: ’’ஆணவமே காரணம்..’’ பாஜக மீது விமர்சனம்.. திடீர் பல்டி அடித்த RSS தலைவர்!

viral photo
’அடுத்த பெண்ணைப் பார்ப்பியா..’ - அமெரிக்காவில் காதலனின் கண்ணில் ஊசியால் குத்திய காதலி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com