மகாராஷ்டிராவில், 14 மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்ட மேம்பாலத்தின் நடுவே ஓட்டை விழுந்து சேதமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நாக்பூர் - மும்பை இடையிலான விரைவு வழிச் சாலையில், பல கோடி ரூபாய் மதிப்பில் கட்டிமுடிக்கப்பட்டு, 2022ஆம் ஆண்டு இறுதியில் இந்த மேம்பாலம் திறக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கீழிருந்து பார்த்தால், கம்பிகள் வெளியே தெரிவதுடன், மேம்பாலத்தில் ஏற்பட்டுள்ள துளை வழியாக வானம் தெரியும் அளவுக்கு மோசமாக சேதமடைந்துள்ளது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அந்த மேம்பாலத்தில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. துளை விழுந்துள்ள பகுதியை சுற்றி தடுப்புகள் அமைக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது. புதிய மேம்பாலம் சேதமடைந்துள்ளது, பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.