ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் ஒரு பகுதியாக குஜராத் சூரத் நகர பேருந்தில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஸ்மார்ட் சிட்டியை உருவாக்க மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதன் ஒரு பகுதியாக சூரத் நகரத்தில் இயங்கும் பேருந்துகளில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பேருந்து எங்கு செல்கிறது, எத்தனை மணிக்கு பேருந்து நிலையத்துக்கு வந்து சேரும் போன்ற தகவல்களை APP வாயிலாக பயனாளிகள் அறிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தனிக் கட்டுப்பாட்டு அறையும் செயல்படுகிறது. இந்தக் கட்டுப்பாட்டு அறையில் இருப்பவர்கள் பேருந்து சேவை குறித்த அனைத்து தகவல்கள்களை உடனுக்குடன் பயனாளிகளுக்கு APP மூலம் தெரியப்படுத்துகின்றனர். கொல்கத்தாவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்ட ஜிபிஎஸ் கருவி திட்டம் தற்போது சூரத் நகரிலும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.