ஆதார் விவரங்களை சேமிக்கும் வெளிநாட்டு நிறுவனம்

ஆதார் விவரங்களை சேமிக்கும் வெளிநாட்டு நிறுவனம்
ஆதார் விவரங்களை சேமிக்கும் வெளிநாட்டு நிறுவனம்
Published on

ஆதார் விவரங்களை வெளிநாட்டில் உள்ள நிறுவனங்கள் பெற முடியும் என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட பதிலில் தெரிய வந்துள்ளது. 

ஆதார் விவரங்களை சேமித்து வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் குறித்த தகவலைக் கேட்டு பெங்களூருவைச் சேர்ந்த கால் மாத்யூ தாமஸ் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் விண்ணப்பித்திருந்தார். அதற்கு அளிக்கப்பட்ட பதிலில் அமெரிக்காவில் தலைமை அலுவலகம் அமைந்துள்ள எல்-1 ஐடென்டிடி சொலுஷன்ஸ் ஆபரேட்டிங் கம்பெனி என்ற நிறுவனம் ஆதார் விவரங்களை சேமிக்கும் ஒப்பந்தம் பெற்றிருப்பதாக கூறப்பட்டுள்ளது. எனவே, ஆதார் விவரங்கள் மூலம் தனிநபர் தகவல்களை வெளிநாட்டு நிறுவனங்கள் அறிய முடியும் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால், வெளிநாட்டு நிறுவனம் இந்தப் பணியை கையாண்டாலும், ஆதாரின் ரகசியத்தன்மை பாதிக்கப்படாது என்று அடையாள அட்டை ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. தனிநபர் விவரங்கள் அரசியல் சட்ட அடிப்படை உரிமையே என உச்ச நீதிமன்றம் அண்மையில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com