எந்த பயிற்சி வகுப்புகளுக்கும் செல்லாமல், கூலித் தொழிலாளியின் மகன் ஒருவர், 6 வருடத்தில் 8 அரசு பணிகளுக்கு தேர்வாகியிருப்பது கேட்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
தனது குடும்பத்தின் பொருளாதார சூழல், உணவுக்கான தேவை என அனைத்தையும் கருத்தில் கொண்டு முழு முயற்சியையும் தனது கல்வியில் செலுத்தியவர்தான், தெலங்கானா மாநிலம், வாரங்கலில் உள்ள சிறிய கிராமத்தை சேர்ந்த 34 வயதான ராஜேஷ்.
கூழித்தொழிலாளியின் மகனான ராஜேஷுக்கு எப்படியாவது அரசு வேலையில் சேர்ந்துவிட வேண்டும் என்பதுதான் முழு முதல் நோக்கமே.. இதனால், பகுதி நேர வேலைக்கு சென்று, மற்ற நேரங்களில் போட்டித்தேர்வுகளில் பங்கேற்க தானாக தயாரித்து வந்துள்ளார். ஆயிரக்கணக்காணவர்கள் அரசு வேலைக்காக விண்ணப்பித்து காத்திக்கொண்டிருப்பார்கள் என்பதை நன்கு அறிந்த ராஜேஷுக்கு எதாவது ஒரு அரசு வேலை கிடைத்தால் போதும் என்பதே எண்ணமாகவும் இருந்துள்ளது.
காரணம், ஒரு நிலையான வருமானம் வந்துவிட்டால், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தனது தந்தைக்கும், கூலித்தொழிலாளியாக பணிப்புரியும் தனது தாய்க்கும் உணவளிக்க அது உதவும் என்பதற்காகதான்.
இந்தநிலையில்தான், 2018- 2024 என இடைப்பட்ட இந்த ஆறு ஆண்டுகளில் ராஜேஷுக்கு ஒன்றல்ல இரண்டல்ல மொத்தமாக 8 அரசு வேலை கிடைத்திருக்கிறது. இதிலும் வியப்பினை ஏற்படுத்தக்கூடிய விஷயம் என்னவென்றால், இது எதற்கும் எந்த ஒரு பயிற்சி வகுப்புகளுக்கும் அவர் செல்லாமல், ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழக நூலகத்தில் மட்டுமே அர்ப்பணிப்புடன் படித்து சாதனை படைத்திருக்கிறார்.
முதலில் 2018 ஆம் ஆண்டு ஏத்தூர் நகரில் உள்ள சமூக நலப்பள்ளியில் முதுகலைப்பட்டதாரி ஆசிரியராக பணிக்கு சேரும் இவருக்கு, அடுத்தடுத்து, பஞ்சாயத்துச்செயலர், முதுகலை ஆசிரியர், பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர், உதவிப்புள்ளியியல், விடுதி நல அலுவலர்,குரூப்4 உள்ளிட்ட ஆறு பணிகளுக்கு ஆஃபர் டெட்டர் வருகிறது.
இதன்பிறகு, சமீபத்தில் ஜீனியர் விரிவுரையாளர் பதவிக்கும் பணியில் சேர்வதற்காக தேர்வு செய்யப்படுகிறார்.. இது gazetted அதிகாரிக்கான பதவி என்பதால் விரைவில் இப்பதவியில் சேர்வார் என்றும் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து ராஜேஷ் தெரிவிக்கையில், “ 2014-2016 க்கு இடைப்பட்ட காலத்தில் என் தந்தை நோய்வாய்ப்பட்டு படுத்தப்படுக்கையானார்..வேலை கிடைக்கும் வரை என் குடும்பத்தை ஆதரிக்க பகுதி நேர வேலைகளில் ஈடுபட்டேன்.. திருமண விழாக்களில் கேட்டரிங் பணிகளில் ஈடுபடுவே.. சில சமயங்களில் அங்கு 100 ரூபாய்க்கும் குறைவான வருமானம்தான் கிடைக்கும்.
எனது தாயின் சிறிய வருமானத்தைக்கொண்டுதான் எங்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொண்டோம்,.. எனது அம்மா கூலித்தொழிலாளி வேலை செய்வது என்னை மிகவும் காயப்படுத்தியது. இருப்பினும், அதுவே என்னை அரசு வேலைக்கு தள்ளுவதற்கு ஒரு தூண்டுதலாகவும் அமைந்தது..
கோச்சிங் சென்டர்கள் என் சக்திக்கு அப்பாற்பட்டவை.. குரூப் 1 தேர்வுக்கு தயாராகும் நேரத்தில், எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் தேர்வில் பங்கெடுக்க முடியாமல் போனது.. இந்த வாய்ப்பை தவறவிட்டதற்காக இன்றளவும் எனது வாழ்வில் நான் வருத்தமடைகிறேன்..” என்று தெரிவித்துள்ளார்.
ராஜேஷுன் இந்த நிலை.. இந்தியாவில் உள்ள இதுப்போன்ற பல ராஜேஷ்களின் வாழ்வியல் சூழலை நினைவுப்படுத்துவதாக அமைகிறது..ராஜேஷ் தனது குடும்பத்தின் தலையெழுத்தை மாற்ற கையில் எடுத்தது கல்வி என்னும் ஆயுதம் ஒன்றே... இதுவே தற்போது அவரை உயர்ந்த நிலைக்கும் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது.