மகாராஷ்டிராவில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும். ஆனால்..? - உச்சநீதிமன்றம்

மகாராஷ்டிராவில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும். ஆனால்..? - உச்சநீதிமன்றம்
மகாராஷ்டிராவில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும். ஆனால்..? - உச்சநீதிமன்றம்
Published on

மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மகராஷ்டிராவில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டுள்ள நிலையில் ஆளுநர் உத்தரவுக்கு எதிராக சிவசேனா கொறடா சுனில் பிரபு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். 16 எம்எல்ஏக்கள் மீதான தகுதி நீக்க வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் ஆளுநரின் உத்தரவு சட்டவிரோதம் என்று சிவசேனா தரப்பில் வாதிடப்பட்டது. நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநரால் உத்தரவிடமுடியாது எனவும் வாதிடப்பட்டது.

இந்நிலையில் இன்று இரவு 9 மணிக்கு தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், உத்தவ் தாக்கரே அரசு நாளை பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டது. மேலும் நம்பிக்கை வாக்கெடுப்பின் முடிவு வழக்கின் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கின் இறுதி உத்தரவுக்கு உட்பட்டது என்றும் தனது தீர்ப்பில் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. சபாநாயகர் மற்றும் ஆளுநரின் அதிகாரம் தொடர்பான வழக்குகள் ஜூலை 11ஆம் தேதி விசாரிக்கப்படும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவித்தது.

இதையடுத்து சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் கோவாவிலிருந்து நாளை மும்பை சென்று நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ள உள்ளனர். நாளை காலை 11 மணிக்கு மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. முன்னதாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதை வீடியோ பதிவு செய்யவும் ஆளுநர் கோஷ்யாரி உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. 39 சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தி முகாமில் அங்கம் வகிப்பதால் உத்தவ் தலைமையிலான அரசு கவிழும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com