உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூரில் 12 வயது சிறுவனின் முகத்தில் மொபைல் போனின் பேட்டரி வெடித்து சீதரியதால் உயிரிழப்பு. அவரது குடும்பத்தினர் போலீசாருக்கு தகவல் சொல்லாமல் ரகசியமாக உடலை அடக்கம் செய்தது அம்பலம். இந்தச் சம்பவம் அங்குள்ள மத்வார் கிராமத்தில் நிகழ்ந்துள்ளது.
கடந்த வெள்ளி அன்று இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. மொபைல் போன் பேட்டரியை மட்டுமே தனியாக சார்ஜ் செய்யும் யூனிவர்ஸல் சார்ஜரை பயன்படுத்தி பேட்டரிக்கு சார்ஜ் செய்துள்ளான் அந்த சிறுவன். ஒரு மணி நேரத்திற்கு பிறகு பேட்டரி சார்ஜ் ஆகியுள்ளதா? என்பதை அறியை நாக்கை பேட்டரியில் வைதுள்ளான் அவன். அப்போது பேட்டரி வெடித்துள்ளது. அதனால் அவனது முகம் சிதைந்துள்ளது.
பேட்டரி வெடித்த சத்தம் கேட்டு சிறுவனின் அறைக்கு விரைந்த அவனது உருவினர்கள், சிறுவன் ரத்த வெள்ளத்தில் தரையில் கிடப்பதை கவனித்துள்ளனர். உடனடியாக ஆரம்ப சுகாதார மருத்துவ மையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். இருப்பினும் அவன் இறந்து விட்டதாக மருத்துவர்கள் சொல்லியுள்ளனர். உடனடியாக போலீசாருக்கு தெரிவிக்காமல் சிறுவனின் உறவினர்கள் சிறுவனை அடக்கம் செய்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.