இந்தியாவில் ஒரே நாளில் 96,982 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1,25,89,067 -லிருந்து 1,26,86,049 ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், கொரோனாவுக்கு 446 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் கொரோனா பாதிப்பால் இறந்தோர் எண்ணிக்கை 1,65,101 -லிருந்து 1,65,547 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் இதுவரை 8,31,10,926 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 43,00,966 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கொரோனா தொற்றிலிருந்து ஒரே நாளில் 50,143 பேர் குணமடைந்தனர். நாட்டில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,16,82,136 -லிருந்து 1,17,32,279 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதித்து சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 7,88,223 ஆக அதிகரித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் முதலாவது அலை கடந்த ஓராண்டு காலமாக கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது, இந்தியாவில் கொரோனா தொற்றின் இராண்டாவது அலை மீண்டும் மக்களை அச்சுறுத்தி வருகிறது. தொற்றுப் பரவலை தடுக்கும் வகையில் அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.