இணைக்கப்படாத பான்-ஆதார்: 9 ஆயிரம் பேருக்கு சம்பளமாக ரூ.1 மட்டுமே வரவு..அதிர்ச்சியில் மும்பைநகராட்சி!

மும்பையில், BMC (Brihanmumbai Municipal Corporation) ஊழியர்களுக்கு, கடந்த மாதம் சம்பளமாக ரூ.1 மட்டுமே வரவு வைக்கப்பட்டிருப்பதால் அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
mumbai image
mumbai imagetwitter
Published on

மும்பையில், BMC (Brihanmumbai Municipal Corporation) ஊழியர்களாக இருக்கும் 9 ஆயிரம் பேரில் பலர், கன்சர்வேன்சி மற்றும் திடக்கழிவு மேலாண்மை துறைகளில் பணிபுரிகிறார்கள். இவர்களுக்குக் கடந்த மாதம் வழங்கப்பட்ட சம்பளத் தொகையாக வெறும் ரூ.1 மட்டுமே வரவு வைக்கப்பட்டு உள்ளது. இதனால் பல ஆயிரம் சம்பளம் வாங்குபவகளும் வருத்தத்தில் உள்ளனர். வருமானவரித் துறையின் உத்தரவின்படி, மார்ச் 31ஆம் தேதிக்கு முன்னர் ஊழியர்கள் தங்கள் பான் மற்றும் ஆதார் அட்டைகளை இணைக்கத் தவறியதே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து முன்பே எச்சரிக்கை கொடுக்கவில்லை எனப் புலம்பும் அவர்கள், தற்போது அந்த இரண்டு அட்டைகளையும் இணைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 2007ஆம் ஆண்டு முதல் கன்சர்வேன்சி தொழிலாளியாகப் பணிபுரிந்து வரும் நாகேஷ் காட்ஜ் என்பவர், தன்னுடைய ஏழு மணி நேர ஷிப்டுக்கு மாதந்தோறும் ஊதியமாக ரூ. 49,000 பெறுகிறார். ஆனால் அவருக்கும் ரூ.1 மட்டுமே வரவு வைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து அவர், "பான் மற்றும் ஆதார் அட்டைகளை இணைப்பது பற்றி எங்களிடம் கூறப்படவில்லை. ஆனால், இந்த சம்பள பிடித்தத்திற்குப் பிறகு, அவர்கள் அட்டைகளை இணைக்கச் சொல்லி வலியுறுத்தி உள்ளனர். அந்தச் சம்பளத்தை வழங்கச் சொல்லி கேட்டுள்ளோம். அது, கிடைக்காவிட்டால் எங்கள் பேரிழப்பு” என்றார்.

இதையும் படிக்க: RSS, சங்பரிவார், பாஜக நிர்வாகிகளுக்குச் சொந்தமான 62% சைனிக் பள்ளிகள்.. RTI மூலம் வெளியான தகவல்!

mumbai image
பான் கார்டு - ஆதார் எண் இணைப்புக்கான கால அவகாசம் நீட்டிப்பு!

இன்னும் சிலரும் இதே கருத்தை முன்வைக்கின்றனர். அவர்கள், “இதுகுறித்து எந்த அடிப்படை புரிதலையும் அவர்கள் எங்களுக்குத் தெரியப்படுத்தவில்லை. ஆனால் சம்பளத்தை மட்டும் பிடித்துள்ளனர். இனி, சாப்பாட்டுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை” என்கின்றனர்.

இதுகுறித்து கருவூலத்தின் தலைமைக் கணக்காளரிடம் பேசியிருப்பதாகக் கூறும் துணை நகராட்சி ஆணையர் சன்ஜோக் கபரே, “ஆதார் மற்றும் பான் கார்டுகளை இணைக்க மார்ச் 31 கடைசி நாள் என்பது விளம்பரங்கள் மூலம் அனைவருக்கும் தெரிந்த விஷயம். கார்டுகள் இணைக்கப்படவில்லை என்றால், பான் கார்டு பலன்கள் நிறுத்தப்பட்டு, சம்பளத்தில் இருந்து 20% வருமான வரி பிடித்தம் செய்யப்படும். சம்பளத்தில் ஆண்டுக்கு 20% டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படுவதால், இந்த மாதம் தொழிலாளர்களுக்குப் பணம் கிடைக்கவில்லை. தொழிலாளர்கள் தங்கள் அட்டைகளை உடனடியாக இணைக்க வேண்டும். கார்டுகளை இணைப்பதற்காக, ஜூன் 2023 காலக்கெடுவை கிட்டத்தட்ட ஒரு வருடம் நீட்டித்திருந்து. கார்டுகளை இணைப்பது என்பது ஒவ்வொருடைய கடமையாகும். அதேநேரத்தில், இரண்டு கார்டுகளையும் இணைத்த பிறகு தொழிலாளர்களின் சம்பளம் திருப்பிச் செலுத்தப்படுமா என்பது வருமானவரி விதிகளைப் பொறுத்தது” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: சாதிச் சான்றிதழ் வழக்கு: கருணாஸ் பட நடிகைக்கு சாதகமாக அமைந்த தீர்ப்பு.. உற்சாகத்தில் பாஜக வேட்பாளர்!

mumbai image
மீண்டும் நீட்டிக்கப்பட்ட கால அவகாசம்; பான் - ஆதார் இணைப்பது எப்படி? ஏன் அவசியம்?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com