19 மாதங்களுக்கு பிறகு பெற்றோருடன் இணைந்த 9 வயது சிறுவன்
கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த தம்பதியர் வேலை நிமித்தமாக கனடாவில் அவர்களது மகன் நீராஜோடு செட்டிலாகியுள்ளனர்.
தம்பதியர் இருவருக்கும் பணிச்சுமை காரணமாக கடந்த 2019 ஜனவரியில் மகன் நீராஜை கேரளாவில் உள்ள தனது பெற்றோரிடம் விட்டுச்சென்றுள்ளனர்.
விடுமுறை காலத்தை தாத்தா தாமோதரன் மற்றும் பாட்டியோடு கொண்டாடி வந்த நீராஜுக்கு அடுத்த சில மாதங்களில் அம்மா, அப்பாவை பார்க்க வேண்டுமென்ற ஏக்கம் வந்துள்ளது.
‘அதற்குள் நீராஜின் அம்மா இரண்டாவது முறையாக கருவுற்ற காரணத்தால் அவரால் சொன்ன தேதிக்கு இந்தியா வர முடியவில்லை. இறுதியில் கடந்த ஜூன் மாதம் அவர்கள் இந்தியா வந்து நீராஜை அழைத்து செல்வதாக இருந்தனர். ஆனால் கொரோனா சூழலினால் அது தள்ளிப்போனது. சிறு குழந்தையான நீராஜ் பாசத்தில் ஏங்கி தவித்துப் போனான்.
கொரோனா சூழலில் வேறு நாட்டை சேர்ந்தவர்களுக்கு தான் இந்தியாவிலிருந்து விமானத்தில் செல்ல அனுமதியளிக்கப்படுவதால் நீதிமன்றத்தை அணுகினோம்.
குழந்தையின் நிலை குறித்து கவுன்சிலிங் மூலம் அறிந்து கொண்ட நீதிபதி என் பேரனை எங்கள் குடும்ப நண்பரும், கனடா நாட்டின் குடிமகனுமான ராஜேஷ் ரவீந்திரன் நாயருடன் கனடா செல்ல அனுமதி கொடுத்தனர்’ எனத் தெரிவித்துள்ளார் நீராஜின் தாத்தா தாமோதரன்.
அதனடிப்படையில் கனடா சென்ற நீராஜ் சுமார் 19 மாதங்களுக்கு பிறகு பெற்றோருடன் இணைந்துள்ளார்.
இப்போது நீராஜ் செம ஹேப்பி...