ஜம்மு காஷ்மீர்: ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து.. 11 பேர் பலியான சோகம்!

ஜம்மு காஷ்மீர்: ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து.. 11 பேர் பலியான சோகம்!
ஜம்மு காஷ்மீர்: ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து.. 11 பேர் பலியான சோகம்!
Published on

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள பரேரி நல்லா அருகே உள்ள ஆழமான பள்ளத்தாக்கில், பேருந்து ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானதில் , 11 பேர் உயிரிழந்தனர் மற்றும் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

சம்பவம் நடந்த உடனேயே அருகிலிருந்த உள்ளூர்வாசிகள், காவல்துறை மற்றும் ராணுவத்தினர் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். சாவ்ஜியானில் இருந்து மண்டிக்குச் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்துள்ளது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். பூஞ்ச், சாவ்ஜியனில் நடந்த சாலை விபத்தில் உயிர் இழந்தது வருத்தமளிக்கிறது. உயிரிழந்த குடும்பத்தினருக்கு இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். இறந்தவர்களின் உறவினர்களுக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும். விபத்தில் காயமடைந்தவர்களுக்கு நல்ல சிகிச்சையும் அளிக்க காவல்துறை மற்றும் சிவில் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று மனோஜ் சின்ஹா தனது ட்வீட்டில் கூறியுள்ளார்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவும் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். "பூஞ்ச், சாவ்ஜியனில் நடந்த சாலை விபத்தில் உயிர் இழந்தது மிகுந்த மனவேதனை அளிக்கிறது. எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும், விபத்தில் துயரமடைந்த குடும்பத்தினருக்காகவே உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புகிறேன்" என்று குடியரசுத் தலைவர் அலுவலகத்தின் ட்வீட் கூறுகிறது.

ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, "பூஞ்சில் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் துயரச் செய்தியை அறிந்து மிகவும் வருந்துகிறேன். இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடையட்டும் மற்றும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும்" என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com