ம.பி | ஆன்மீக நிகழ்வின்போது கோயில் சுவர் இடிந்து விழுந்ததில் 9 சிறார்கள் பரிதாப உயிரிழப்பு!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் ஆன்மீக நிகழ்ச்சியின்போது கோயிலின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 9 சிறார்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மத்திய பிரதேசம்
மத்திய பிரதேசம் முகநூல்
Published on

மத்திய பிரதேசம் மாநிலத்தில் ஆன்மீக நிகழ்ச்சியின்போது கோயிலின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 9 சிறார்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மத்திய பிரதேசத்தில் இடைவிடாத மழை பெய்து வருகிறது. இந்தவகையில், இன்று காலை 8.30 மணி அளவில், சாகர் மாவட்டத்தின் ஷாபூர் கிராமத்தில் உள்ள ஹர்தவுல் பாபா கோயிவிலில் மத நிகழ்ச்சியின்போது, திடீரென சுற்றுச்சுவர் இடிந்து விழுந்துள்ளது.

இடிந்து விழுந்த சுவரின் இடிபாடுகளில் பல குழந்தைகள் சிக்கியுள்ளனர். இதனால், சுமார் 9 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும், 2 குழந்தைகள் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் என அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், புல்டோசர்களின் உதவிக்கொண்டு சுவர் இடிந்த பகுதிகளை அப்புறப்படுத்தும் பணியானது நடைபெற்று வருகிறது. உயிரிழந்த குழந்தைகள் அனைவரும் 10- 15 வயதுக்குட்பட்டவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் நடைப்பெற்ற கோவிலின் சுற்றுச்சுவர்கள் கிட்டதட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாக பழமையானது என இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது. இந்த விபத்தான கோவிலின் சவான் உற்வசத்தின் ஒரு பகுதியாக, மண் சிவலிங்கங்கள் செய்து கொண்டிருந்தபோது தீடீரென விபத்து அரங்கேறியுள்ளது.

மத்திய பிரதேசம்
கர்நாடகா: விஷமாக மாறிய கறிக்குழம்பு - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு.. விபரீத முடிவா?

முன்னதாக, மத்தியப் பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தில் உள்ள கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்து, இடிபாடுகளுக்கு அடியில் சிக்கி நான்கு குழந்தைகள் உயிரிழந்த ஒரு நாளுக்குப் பிறகு இந்த சம்பவம் நடந்துள்ளது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com