விவசாயிகளுடன் நடந்த 8-வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி

விவசாயிகளுடன் நடந்த 8-வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி
விவசாயிகளுடன் நடந்த 8-வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி
Published on

வேளாண் சட்டங்களை திரும்பப்பெற்றால் மட்டுமே வீடு திரும்புவோம் என டெல்லியில் போராடும் விவசாயிகள் கூறியுள்ள நிலையில், விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் நடைபெற்ற 8-வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்தது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியிலும், டெல்லி மாநில எல்லைகளிலும் 44 நாட்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளுடன் ஏற்கெனவே 7 முறை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் இல்லாத நிலையில், இன்று டெல்லி விஞ்ஞான் பவனில் 8-வது முறையாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.

மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், உணவுத்துறை அமைச்சர் பியூஷ் கோயல், வர்த்தக துறை இணை அமைச்சர் சோம் பிரகாஷ் ஆகியோர் 41 விவசாய அமைப்பு பிரதிநிதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். வேளாண் சட்டங்களை திரும்பப்பெற்றால் மட்டுமே, வீட்டுக்கு திரும்பிச் செல்வோம் என விவசாயிகள் உறுதியாக கூறிய நிலையில், மத்திய அரசும் சட்டங்களை திரும்பபெறப்போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்தது.

இந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் 9-வது முறையாக வருகிற 15 ஆம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பேச்சுவார்த்தைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தோமர், “ சட்டங்களை திரும்பப்பெறுவதை தவிர்த்து பிற ஆலோசனைகளை விவசாயிகளிடம் கேட்டோம். விவசாயிகள் ஏதும் கூறாததால், பேச்சுவார்த்தை முடிவுபெற்றது.வேளாண் சட்டங்களுக்கு பல விவசாயிகள் ஆதரவு தெரிவிக்கும் நிலையில், போராடுவோர் தேசநலனை கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

அதேநேரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாரதிய கிசான் சங்க செய்தித் தொடர்பாளர் ராகேஷ், வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றால் மட்டுமே வீடு திரும்புவோம் என உறுதியாக தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com