தம்பி மனைவியின் கோசாலைக்கு அதிக நிதி ஒதுக்கிய அகிலேஷ்

தம்பி மனைவியின் கோசாலைக்கு அதிக நிதி ஒதுக்கிய அகிலேஷ்
தம்பி மனைவியின் கோசாலைக்கு அதிக நிதி ஒதுக்கிய அகிலேஷ்
Published on

உத்தரப் பிரதேச மாநில முதலமைச்சராக அகிலேஷ் யாதவ் இருந்த 5 ஆண்டுகளில், அவரது தம்பி மனைவி அபர்னா யாதவ் நடத்திய கோசாலைக்கு அதிகபட்ச நிதியை மானியமாக அளித்தது தெரியவந்துள்ளது.

அகிலேஷ் யாதவ் முதலமைச்சராக இருந்த 2012 முதல் 2017 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், கோசாலைகள் மற்றும் பசு பாதுகாப்பு மையங்களுக்கு மானியமாக உத்தரப் பிரதேச அரசின் கோ-சேவா ஆணைக்குழுவிலிருந்து 9 கோடியே 66 லட்சம் வழங்கப்பட்டிருக்கிறது. அதில் 8 கோடியே 35 லட்சம் ரூபாயை அபர்னா யாதவின் ஜீவ்-ஆஷ்ரயா எனும் தொண்டு நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருப்பது தகவலறியும் உரிமைச் சட்டம் மூலம் தெரியவந்திருக்கிறது. அதிலும் கடந்த 2012 முதல் 2015 ஆம் ஆண்டு வரை இந்த ஒரு கோசாலைக்கு மட்டுமே நிதியுதவி அளித்ததும், அதன் பிறகே தற்போது வரை மற்ற கோசாலைகளுக்கும் மானியத்தை பகிர்ந்து அளித்திருப்பதும் தெரியவந்திருக்கிறது. அரசின் நிதியை குடும்ப உறுப்பினர்களுக்கு திருப்பி விட்டு சமாஜ்வாதி கட்சி அரசியல் ஆதாயம் அடைந்திருப்பது இதன் மூலம் தெளிவாகியிருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com