எச்சரிக்கை செய்தும் அரசு பங்களாவை காலி செய்யாத 82 முன்னாள் எம்.பிக்கள்

எச்சரிக்கை செய்தும் அரசு பங்களாவை காலி செய்யாத 82 முன்னாள் எம்.பிக்கள்
எச்சரிக்கை செய்தும் அரசு பங்களாவை காலி செய்யாத 82 முன்னாள் எம்.பிக்கள்
Published on

மக்களவை வீட்டு வசதிக்குழு எச்சரிக்கை செய்தும், தங்களது அரசு பங்களாக்களை காலி செய்யாத 82 முன்னாள் எம்.பிக்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. 

மக்களவை கலைக்கப்பட்ட ஒரு மாதத்துக்குள், பதவி வகித்த எம்.பி.க்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அரசு பங்களாக்களை காலி செய்ய வேண்டும் என்பது நடைமுறை. கடந்த மக்களவை மே 25- ஆம் தேதி கலைக்கப்பட்டதை அடுத்து பெரும்பாலான எம்.பி.க்கள் அரசு பங்களாவை காலி செய்தனர்.

ஒரு மாதத்துக்கு பிறகும், காலி செய்யாத சுமார் 200 எம்.பி.க்களுக்கு சி.ஆர்.பாட்டீல் தலைமையிலான மக்களவை வீட்டு வசதிக்குழு (Lok Sabha Housing Committee ), விரைவில் காலி செய்ய ஒரு வாரம் கெடு விதித்து கடந்த மாதம் உத்தரவிட்டது. இதன் பிறகு பெரும்பாலான எம்.பி.க்கள், காலி செய்தனர். இன்னும் 82 எம்.பி.க்கள் காலி செய்யாததால், அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

பிறகும் காலி செய்ய மறுத்தால் அந்த எம்.பி.க்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com