அறிகுறி இல்லாமலேயே 80% பேருக்கு கொரோனா - இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்

அறிகுறி இல்லாமலேயே 80% பேருக்கு கொரோனா - இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்
அறிகுறி இல்லாமலேயே 80% பேருக்கு கொரோனா - இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்
Published on

காய்ச்சல், சளி, இருமல் போன்ற எந்த அறிகுறியும் இல்லாமல் இந்தியாவில் 80% பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது

கொரோனாவால் உலக நாடுகள் பாதிப்படைந்துள்ள நிலையில் இந்தியாவும் பாதிப்பை சந்தித்துள்ளது. இதுவரை நாடு முழுவதும் 17 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. மேலும் பலருக்கும் கொரோனா பரிசோதனைகள் தொடர்கின்றன. தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. நேற்றைய தினம் மட்டும் தமிழகத்தில் 105 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது.

இதில் சென்னையில் மட்டும் 50 பேருக்கு உறுதியானது. இந்நிலையில் கொரோனாவுக்கு அறிகுறியாக சளி, காய்ச்சல் ஆகியவற்றை மருத்துவர்கள் கூறி வந்த நிலையில் அந்த அறிகுறி இல்லாமலும் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக தற்போது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

அதன்படி, காய்ச்சல், சளி, இருமல் போன்ற எந்த அறிகுறியும் இல்லாமல் இந்தியாவில் 80% பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது கவலை அளிக்கக்கூடிய வகையில் உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலை சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com