நின்ற லாரி மீது டபுள் டெக்கர் பேருந்து மோதிய விபத்தில் குழந்தை, பெண் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். 30 பேர் படுகாயமடைந்தனர்.
உத்தரபிரதேச மாநிலம் ஆரையாவில் இருந்து நொய்டா நோக்கி, தனியார் டபுள் டெக்கர் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில், கரோலி கிராமத்துக்கு அருகே இன்று அதிகாலை சென்றுகொண்டிருந்த போது, ஓரமாக நின்ற லாரி மீது பேருந்து பயங்கரமாக மோதியது.
இதில் பேருந்து டிரைவர், ஒரு குழந்தை, பெண் உட்பட 8 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். 30 பேர் படுகாயமடைந்தனர். இதுபற்றி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் அடிக்கடி விபத்துகள் நடந்துவருகின்றன. கடந்த ஆறு வருடங்களில் 705 பேர் இங்கு நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.