’உயரமா இருக்கிறது குத்தமாய்யா?’ -ரூம் கிடைக்காமல் அவதிப்பட்ட 8 அடி ஆப்கான் ரசிகர்!

’உயரமா இருக்கிறது குத்தமாய்யா?’ -ரூம் கிடைக்காமல் அவதிப்பட்ட 8 அடி ஆப்கான் ரசிகர்!
’உயரமா இருக்கிறது குத்தமாய்யா?’ -ரூம் கிடைக்காமல் அவதிப்பட்ட 8 அடி ஆப்கான் ரசிகர்!
Published on

ஆப்கானிஸ்தான் - வெஸ்ட் இஸ்டீஸ் அணிகள் மோதும் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது. முதல் போட்டி லக்னோவில் நேற்று நடந்தது. இதைப் பார்ப்பதற்காக கடந்த சில நாட்களுக்கு முன், ஆப்கான் தலைநகர் காபூலில் இருந்து இந்தியா வந்தார், அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர், ஷேர் கான்.

தனியாக வந்த அவர், போட்டி நடக்கும் லக்னோவுக்குச் சென்றார். கடந்த செவ்வாய்க்கிழமை, அங்குள்ள ஓட்டல்களுக்குச் சென்று, அறை கேட்டார். அவரது, உயரத்தைப் பார்த்த ஓட்டல் நிர்வாகங்கள், அறை வழங்க மறுத்து விட்டது. அவர் உயரம் அதிகமல்ல, வெறும் 8 அடிதான். அதாவது 8 அடி இரண்டு அங்குலம்! 

ஒவ்வொரு ஓட்டலாகச் சென்றும் அவருக்கு ஏமாற்றமே மிச்சம். ’உயரமா இருக்கிறது ஒரு குத்தமாய்யா?’ என்று வருத்தப்பட்ட அவர், கடைசியாக போலீஸ் ஸ்டேஷன் சென்று முறையிட்டார். அவர்கள், அவரை அழைத்துச் சென்று நாகா ஹிண்டோலா பகுதியில் உள்ள, ஓட்டல் ராஜ்தானியில் தங்க வைத்தனர். இதையடுத்து போலீசுக்கு நன்றி தெரிவித்தார் ஷேர் கான்.

இவரது உயரம் அந்தப் பகுதியில் பரபரப்பாகிவிட, ஷேர் கானை பார்வையிட, ஓட்டலுக்கு ஏராளமானோர் வந்துவிட்டனர். ‘சுமார் 200 பேர், நேற்று அவரை பார்வையிட வந்து விட்டனர். இதனால் அவருக்கு அதிக தொந்தரவு ஏறப்பட்டது. இன்னும் நான்கைந்து நாள் இங்குதான் அவர் தங்குகிறார்’ என்றார் ஓட்டல் அதிபர் ரானு.

பின்னர் போலீஸ் பாதுகாப்புடன், ஆப்கானிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் போட்டி நடந்த ஏகனா ஸ்டேடியத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், போட்டியை ரசித்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com