மரணமடைந்த கணவர் : நெற்றியில் பொட்டு வைத்ததால் மூதாட்டிக்கு பென்சன் மறுப்பு

மரணமடைந்த கணவர் : நெற்றியில் பொட்டு வைத்ததால் மூதாட்டிக்கு பென்சன் மறுப்பு
மரணமடைந்த கணவர் : நெற்றியில் பொட்டு வைத்ததால் மூதாட்டிக்கு பென்சன் மறுப்பு
Published on

கணவரின் மரணத்திற்கு பின் பொட்டு வைத்த காரணத்தினால் சென்னையில் 77 வயது மூதாட்டிக்கு ஓய்வூதியம் வழங்க மறுத்ததாக புகார் எழுந்துள்ளது.

சென்னையை சேர்ந்தவர் ரமேஷ். வயது 82. கடந்த 1993ம் ஆண்டிலிருந்து துறைமுகத்தில் பணியாற்றி வந்த அவர், கடந்த மார்ச் மாதம் உயிரிழந்தார். இதனிடையே கணவர் மரணத்திற்கு பின் வந்து சேர வேண்டிய பென்சன் பணத்திற்காக, அவரது மனைவி தேவி தனது மகன் மற்றும் மருமகளுடன் சம்பந்தப்பட்ட அலுவலத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த அதிகாரி ரவியிடம், அவர்கள் கேட்ட அடையாள சான்றிதழ் மற்றும் புகைப்படத்தை கொடுத்துள்ளனர். ஆனால் மூதாட்டி தேவியை ஒரு முறை பார்த்த அலுவலர் ரவி அந்த புகைப்படத்தை மீண்டும் ஒரு முறை பார்த்திருக்கிறார். இதனையடுத்து அந்த புகைப்படத்தை ரவி வாங்க மறுப்பு தெரிவித்துவிட்டார். காரணம் கேட்டபோது, புகைப்படத்தில் தேவி பொட்டு வைத்திருக்கிறார். பொட்டு இல்லாத புகைப்படத்தை தான் ஏற்க முடியும் என கூறிவிட்டார். தேவியின் புகைப்படம் கணவர் மரணத்திற்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகும். இதனையடுத்து தனது மாமியார் தேவியை பொட்டை அகற்றசொல்லி புகைப்படம் எடுத்தபோது, அவர் மனம் ஒடிந்துபோனதை தங்களால் உணர முடிந்ததாக தேவியின் மருமகள் கூறியுள்ளார். கணவரை இழந்தவர்கள் பொட்டு வைக்கக்கூடாது என்ற அதிகாரியின் எண்ணம் வெட்கக்கேடானது என்றும் அவர் கூறியுள்ளார்.

இதனையடுத்து மற்றொரு நாள் அலுவலகம் சென்ற தேவி குடும்பத்தினர் விரைவாக பென்சன் பெறுவது தொடர்பான ஆவணங்களை மற்ற ஒரு அதிகாரியிடம் கொடுத்திருக்கின்றனர். அன்றைய தினம் ரவி விடுமுறை. எனவே அங்கிருந்த அதிகாரியிடம் ரவி குறித்து புகார் தெரிவித்திருக்கின்றனர். அப்போது அங்கிருந்த அந்த நபர், கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்துகொள்ளுங்கள் என எளிமையாக கூறி முடித்திருக்கிறார்.

Courtesy: The NewsMinute

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com