சச்சின் to அதானி! கோலாகலமாக நடைபெறும் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்; 7000 விஐபிகளுக்கு அழைப்பு

உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க வருமாறு ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த சேக்ஷத்ரா அறக்கட்டளையால் 7,000 பிரமுகர்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.
அயோத்தி ராமர் கோயில்
அயோத்தி ராமர் கோயில்ட்விட்டர்
Published on

உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தி ராம ஜென்ம பூமி வழக்கில் கடந்த 2019ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து, ராமர் பிறந்த இடம் என நம்பப்படும் அயோத்தியின் ராம ஜென்ம பூமியில் பிரம்மாண்ட கோயில் கட்டப்பட்டு வருகிறது. கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி நடைபெற்ற இக்கோயிலின் பூமி பூஜையில், பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு, கட்டுமானப் பணிகளைத் துவக்கிவைத்தார்.

இந்தக் கோயிலின் கட்டுமான பணிக்காக ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த சேக்ஷத்ரா அறக்கட்டளையின் சார்பில் ரூ.2000 கோடிக்கும் அதிகமாக நிதி பெறப்பட்டு ராமர் கோவில் அமைக்கும் பணி வேகமெடுத்து வருகின்றன. அத்துடன், இதன் திறப்பு விழா குறித்த அறிவிப்பையும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். அதன்படி, இக்கோயிலின் கட்டுமானப் பணிகள் முடிந்து அடுத்த வருடம் ஜனவரி 22ஆம் தேதி ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இம்மாத இறுதிக்குள் பணிகள் முடிவுக்கு வரும்வகையில் இரவு பகலாக பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதையும் படிக்க: மீண்டும் ஓர் எல்லை தாண்டிய காதல்: ஐந்தரை ஆண்டு காத்திருப்புக்குப் பின் இந்தியா வந்த பாகிஸ்தான் பெண்!

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் இக்கோயில் கும்பாபிஷேக திருப்பணிகளில் கலந்துகொள்ள இருக்கும் நபர்கள் குறித்த ஒரு பட்டியலும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதன்படி, இக்கோயில் கும்பாபிஷேக விழாவில் பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர். மேலும், கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க வருமாறு ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த சேக்ஷத்ரா அறக்கட்டளையால் 7,000 பிரமுகர்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.

அதில், தொழிலதிபர்கள்‌ முகேஷ்‌ அம்பானி, கெளதம்‌ அதானி, ரத்தன்‌ டாடா, கிரிக்கெட்‌ வீரர்கள்‌ சச்சின்‌ டெண்டுல்கர்‌, விராட்‌ கோலி, ரோகித் சர்மா, நடிகர்கள்‌ அமிதாப்‌ பச்சன்‌, அக்‌ஷய்‌ குமார்‌, கங்கனா ரணாவத்‌ உள்ளிட்ட 3,000 முக்கிய பிரபலங்களுக்கு அழைப்பிதழ்‌ வழங்கப்பட்டுள்ளது. மேலும்‌, நாடு முழுவதும்‌ உள்ள மதத்‌ தலைவர்கள்‌, முன்னாள்‌ பாதுகாப்புப்‌ படை வீரர்கள்‌, முன்னாள்‌. ஐஏஎஸ்‌ மற்றும் ஐபிஎஸ்‌ அதிகாரிகள்‌, கவிஞர்கள்‌, இசைக்‌ கலைஞர்கள்‌, பத்மஸ்ரீ, பத்ம பூஷண்‌ விருதாளர்கள்‌, ஹிந்து அமைப்பின்‌ நிர்வாகிகள்‌ என மொத்தம்‌ 4000 பேருக்கு நிகழ்ச்சியில்‌ பங்கேற்க அழைப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: தெலங்கானா: முதல்வராக ரேவந்த் ரெட்டி பதவியேற்பு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com