இந்தியாவைச் சேர்ந்த அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான 70-க்கும் மேற்பட்ட இணையதளங்களை ஹேக்கர்கள் முடக்கியுள்ளனர். நபிகள் நாயகம் பற்றி பாஜகவைச் சேர்ந்த நுபுர் சர்மா சர்ச்சைக்குரிய வகையில் பேசியதை கண்டித்து இச்செயலில் ஈடுபட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக இஸ்ரேலுக்கான இந்திய தூதரகம், தேசிய வேளாண் விரிவாக்க மேலாண்மை அமைப்பு, இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில், நாக்பூரிலுள்ள அறிவியல் கல்வி நிறுவனம், டெல்லி பப்ளிக் ஸ்கூல் உள்ளிட்ட பல அமைப்புகளின் இணையதளங்கள் கடந்த சில நாட்களில் முடக்கப்பட்டுள்ளன.
மகாராஷ்டிராவில் மட்டும் 50க்கும் அதிகமான இணையதளங்களில் ஹேக்கர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். டிராகன்ஃபோர்ஸ்மலேசியா என்ற பெயரில் இணையதளங்களை முடக்கியுள்ள ஹேக்கர்கள், “உங்களுக்கு உங்கள் மதம்! எனக்கு என் மதம்!” என ஆடியோ மற்றும் வாசகங்களை வெளியிட்டுள்ளனர்.