நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தை நாட 7 மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன.
நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைப்பது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சி முதலமைச்சர்கள் பங்கேற்ற ஆன்லைன் ஆலோசனைக்கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் முதலமைச்சர்கள் மற்றும் மேற்கு வங்கம், மகாராஷ்டிரா உள்ளிட்ட 7 மாநிலங்களின் முதலமைச்சர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி 7 மாநில முதலமைச்சர்களும் நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைப்பது தொடர்பாக உச்சநீதிமன்றத்தை நாடலாம் என்று அறிவுறுத்தினார். அதற்கு மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே மற்றும் காங்கிரஸ் முதலமைச்சர்கள் உட்பட அனைவரும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து நாளை உச்சநீதிமன்றத்தில் இதுதொடர்பாக மனு தாக்கல் செய்யப்படலாம் எனத்தெரிகிறது.