மேற்குவங்கம்: மின்னல் தாக்கி 3 குழந்தைகள் உள்பட 7 பேர் உயிரிழப்பு

மேற்கு வங்கத்தில் மின்னல் தாக்கியதில் 3 குழந்தைகள் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
lightning strikes
lightning strikesFile Image
Published on

மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் நேற்று மாலையில் பலத்த இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. அப்போது எதிர்பாராதவிதமாக மின்னல் தாக்கியதில் 3 குழந்தைகள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். கிருஷ்ணோ சௌத்ரி (65 வயது), உம்மே குல்சும் (6), டெபோஸ்ரீ மண்டல் (27), சோமித் மண்டல் (10), நஜ்ருல் எஸ்கே (32), ராபிசன் பீபி (54), மற்றும் ஈசா சர்க்கார் (8) ஆகிய 7 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக மாவட்ட மாஜிஸ்திரேட் நிதின் சிங்கானியா தெரிவித்துள்ளார்.

இது தவிர மின்னல் தாக்கி 9 கால்நடைகளும் பலியாகி உள்ளன. அதேபோல் மால்டாவில் உள்ள பாங்கிடோலா உயர்நிலைப்பள்ளிக்கு அருகில் மின்னல் தாக்கியதில் 12 மாணவர்கள் காயமடைந்தனர். காயமடைந்த மாணவர்கள் பாங்கிடோலா கிராமப்புற மருத்துவமனை மற்றும் மால்டா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட மாஜிஸ்திரேட் நிதின் சிங்கானியா கூறியுள்ளார்.

இதையும் படிக்கலாமே:

lightning strikes
இடி, மின்னல் தாக்குதலில் சிக்காமல் தப்பிப்பது எப்படி?: சில விழிப்புணர்வு தகவல்கள்!
lightning strikes
மழை நேரத்தில் செய்யக்கூடாதவை, செய்ய வேண்டியவை! #VisualStory

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com