இந்தியாவில் கொரோனாவால் பலியானவர்களில் ஆண்களே அதிகம்: முழு விவரம்..!

இந்தியாவில் கொரோனாவால் பலியானவர்களில் ஆண்களே அதிகம்: முழு விவரம்..!
இந்தியாவில் கொரோனாவால் பலியானவர்களில் ஆண்களே அதிகம்: முழு விவரம்..!
Published on

இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானவர்களில் 90 சதவிகிதத்திற்கு மேற்பட்டவர்கள் 40 வயதுக்கு மேலுள்ளவர்கள் என மத்திய சுகாதார அமைச்சகத்தின் தகவல்களின் அடிப்படையில் தெரிவித்துள்ளது தனியார் செய்தி நிறுவனம் ஒன்று. 

அதோடு கொரோனாவுக்கு பலியானவர்களில் பெண்களை காட்டிலும் இந்தியாவில் ஆண்களே அதிகம் உயிரிழந்துள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைரஸ் தொற்றினால் சுமார் 69 சதவிகித ஆண்கள் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 22 வரை கொரோனாவுக்கு பலியான 56,292 பேரில் பெண்கள் (17,315) மற்றும் ஆண்கள் (38,973) என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆண்களுக்கும், வயதானவர்களுக்கும் கொரோனா உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் என அது குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டு வரும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் ஏற்படும் உயிரிழப்புகளில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே பெண்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதே நேரத்தில் 11 - 20 வயதுடைய ஆண்கள் மற்றும் பெண்களின் இறப்பு விகிதம் சரிசமமாக இருப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது. இந்த வயது பிரிவில் சுமார் 49 சதவிகித பெண்கள் உயிரிழந்துள்ளனர். 

10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் கொரோனாவினால் உயிரிழப்பது குறைவாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதே போல 90 வயதிற்கு மேற்பட்டவர்களில் மொத்த உயிரிழப்புகளில் வெறும் 0.5 சதவிகிதத்தினர் மட்டுமே உயிரிழந்துள்ளதாகவும். 85 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் 3.4 சதவிகிதம் பேர் உயிரிழந்துள்ளதாகவும் உலக பொது சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 

‘இருதய நோய், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களே அதிகளவில் கொரோனாவினால் உயிரிழந்துள்ளனர். இந்தியா கொரோனவை தடுப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருவதால் இறப்பு விகிதத்தை 1.7 சதவிகிதமாக குறைத்துள்ளோம்’ என தெரிவித்துள்ளார் மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன்.

உலகளவில் கொரோனா இறப்பு விகிதம் 3.3 சதவிகிதமாக உள்ளது.

உலகளவில் 50 முதல் 70 வயது வரை உள்ளவர்களையே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இளம் வயதிலேயே இந்தியர்கள் நாட்பட்ட நோய்களுக்கு ஆளாவதும் கொரோனாவினால் உயிரிழக்க காரணம் என தெரிவித்துள்ளார் யாடின் மேத்தா.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி பெண்களை காட்டிலும் ஆண்களுக்கு குறைவாக இருப்பதே கொரோனா தொற்றினால் ஆண்கள் அதிகம் உயிரிழக்க காரணம் என தெரிவித்துள்ளனர் அமெரிக்க விஞ்ஞானிகள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com