கடந்த ஆறு ஆண்டுகளில் 680 துணை ராணுவப் படையினர் தற்கொலை செய்துகொண்டதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய், “மத்திய ஆயுதப்படை போலீஸ் அளித்த தரவுகளின் படி, கடந்த ஆறு ஆண்டுகளில் 680 துனை ராணுவப்படையினர் தற்கொலை செய்துள்ளனர்.
குடும்ப பிரச்னைகளும், உடல்நிலை சரியில்லாத காரணத்தினாலும், பொருளாதார சிக்கலினாலும் பலர் தற்கொலை செய்துகொண்டுள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து தகுந்த ஆலோசனைகளை நிபுணர்களை கொண்டு அவ்வபோது அரசு கவுன்சிலிங் வழங்கி வருகிறது. மேலும், விபத்துகளில் 1,764 பேரும் என்கவுண்டரில் 323 பேரும் உயிரிழந்துள்ளனர்” எனத் தெரிவித்தார்.