தேசியத் திரைப்பட விருது சர்ச்சை: பங்கேற்க மறுக்கும் 68 கலைஞர்கள்

தேசியத் திரைப்பட விருது சர்ச்சை: பங்கேற்க மறுக்கும் 68 கலைஞர்கள்

தேசியத் திரைப்பட விருது சர்ச்சை: பங்கேற்க மறுக்கும் 68 கலைஞர்கள்
Published on

தேசியத் திரைப்பட விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ளப்போவதில்லை என விருதுக்கு தேர்வாகியுள்ள 68 கலைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

தேசியத் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா இன்று மாலை நடைபெறுகிறது. இந்த விருதை புறக்கணிப்பதாக 68 கலைஞர்கள் கூறியுள்ளனர். குடியரசுத் தலைவர் கையால் தங்களுக்கு விருது கிடைக்கப்போவதில்லை என்ற தகவலால் வேதனையுற்று இம்முடிவை எடுத்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழ்த்திரைப்பட இயக்குநர் செழி்யன், நடிகர் பகத் ஃபாசில் உள்ளிட்ட 68 பேர், திரைப்பட விழாக்களுக்கான கூடுதல் இயக்குநர் சைதன்ய பிரசாத்துக்கு கூட்டாக கடிதம் எழுதியுள்ளனர். 

அதில் தேசியத் திரைப்பட விருதை குடியரசுத் தலைவர் கையால் பெறுவது என்பது ஒரு கலைஞன் வாழ்நாள் முழுவதும் நினைத்து பெருமைப்படக் கூடிய விஷயம் என அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் இம்முறை 11 பேருக்கு மட்டுமே குடியரசுத் தலைவர் விருது தருவார் என்றும், மற்ற 120 பேருக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி விருதைத் தருவார் என அறிவித்திருப்பதும் தங்களுக்கு ஏமாற்றத்தை தருவதாக குறிப்பிட்டுள்ளனர். மேலும் குடியரசுத் தலைவர் தனது கையால் விருதுகளை வழங்குவது 65 ஆண்டுகால மரபு என்றும், தற்போது அது மீறப்படுவதாக தங்களுக்கு தோன்றுவதாகவும் கூறியுள்ளனர். எனவே இவ்விழாவை புறக்கணிக்கும் முடிவுக்கு தாங்கள் வராவிட்டாலும், பங்கேற்காமல் இருந்து வேதனையை வெளிப்படுத்த போகிறோம் என்றும் தெரிவித்துள்ளனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com