ஹென்லி பிரைவேட் வெல்த் மைக்ரேஷன் வெளியிட்டுள்ள ஆய்வில், 2023 ஆம் ஆண்டில் இந்தியாவில் உள்ள கோடிஸ்வரர்களில் 6,500 பேர் வெளியேற இருப்பதாகத் தெரிவித்துள்ளது. இந்தப் பட்டியலில் 13,500 பேர் வெளியேறுவார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை சீனாவில் 10,800 ஆக இருந்தது. இந்நிலையில், இந்த ஆண்டில் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரையில், 2022ஆம் ஆண்டில் இந்தியாவிலிருந்து மொத்தம் 7500 பேர் வெளியேறியிருந்த நிலையில், இந்த ஆண்டில் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. அதே நேரத்தில் உலக அளவில், 2023-24 ஆம் ஆண்டில் முறையே 1,22,000 மற்றும் 1,28,000 கோடீஸ்வரர்கள் இடம்பெயர்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் பெரும்பாலும், துபாய் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுகளுக்கு இடம்பெயர்வதாக அந்த ஆய்வு தெரிவித்துள்ளது. அந்த நாட்டின் சிறப்பம்சங்களால் அவர்கள் கவர்ந்திழுக்கப்படுகிறார்கள். குறிப்பாக துபாயில் வழங்கப்படும் கோல்டன் விசா, சுற்றுச்சூழல், அமைதி, வணிகம், முதலீடு போன்றவை அவர்களுக்கு திருப்தி அளிப்பதாகச் சொல்லப்படுகிறது. அதேநேரத்தில், இந்தியாவில் கல்வி, வேலைவாய்ப்பு, வருமானவரி உள்ளிட்ட பிரச்னைகளால் அவர்கள் இடம்பெயர்வதாக அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
இதன்மூலம், 2023ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் 5,200 மில்லியனர்களும், UAEயில் 4,500 மில்லியனர்களும், சிங்கப்பூரில் 3,200 மில்லியனர்களும், அமெரிக்காவில் 2,100 மில்லியனர்களும் இடம்பெயர்வார்கள் என்று அவ்வறிக்கை சொல்கிறது. மேலும், சுவிட்சர்லாந்து, கனடா, கிரீஸ், பிரான்ஸ், போர்ச்சுகல் மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கும் மில்லியனர்கள் பயணமாவார்கள் என தெரிவித்துள்ளது.