இந்தியா
64,500 சதுர மீட்டர்! 4 மாடி கட்டடம்! ரூ.970 கோடி செலவு! புதிய நாடாளுமன்றத்தின் சிறப்பம்சம் என்னென்ன?
புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் திறப்பு விழா வரும் 28-ஆம் தேதி நடைபெற உள்ளது. அக்கட்டடத்தில் உள்ள சிறப்பு அம்சங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
தலைநகர் டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டடம், 64 ஆயிரத்து 500 சதுர மீட்டர் பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ளது. நவீன நான்கு மாடி கட்டடமாக உருவாக்கப்பட்டுள்ள இதில், மக்களவை மற்றும் மாநிலங்களவை அரங்கங்கள் மற்றும் பல்வேறு அலுவலகங்கள், ஆலோசனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
புதிய நாடாளுமன்ற வளாகத்தை கட்டுமானம் செய்ய 26 ஆயிரம் டன் எஃகு மற்றும் 63 ஆயிரம் டன் சிமெண்ட் பயன்படுத்தப்பட்டுள்ள நிலையில், புதிய நாடாளுமன்ற வளாகத்தைக் கட்டமைத்ததிற்கான மொத்த செலவு 970 கோடி ரூபாய் என மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.