6 மாதங்களில், 6 ஆயிரம் ரயில் நிலையங்களில் இலவச வைஃபை வசதி ஏற்படுத்தப்படும் என்று ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற ஸ்மார்ட் ரயில்வே என்ற கருத்தரங்கில் பியூஷ் கோயல் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், தகவல் தொழில்நுட்பத்தின் நவீன அம்சங்களை பயணிகளுக்கு கிடைக்கச் செய்வதில் ரயில்வே ஆர்வம் கொண்டிருப்பதாக தெரிவித்தார். ரயில்களின் நேரத்தை கடைபிடிப்பதில் கவனம் செலுத்தி வருவதாக கூறினார்.
கடந்த ஏப்ரல் முதல் இப்போது வரை ரயில்களின் குறித்த நேர இயக்கம் 74 சதவிகிதம் வரை மேம்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். ரயில் இன்ஜின்களில் ஜிபிஎஸ் கருவியை பொருத்தி, ரயில் சென்று கொண்டிருக்கும் இடத்தை துல்லியமாக அறிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும் அடுத்த 6 மாதங்களில், கூடுதலாக 6,000 ரயில் நிலையங்களில் இலவச வைஃபை வசதி கொண்டுவரப்படும் என்றார்.
Read Also -> 16 நிமிடங்களில் விண்வெளிக்கு செல்லும் 3 இந்தியர்கள்