கடந்த 3 ஆண்டுகளில் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளில் 60% பெண் குழந்தைகள் என மகளிர் மற்றும் குழந்தைகள் வளர்ப்பு அமைச்சகம் நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
இந்தியாவில் பெண் பிள்ளைகளைவிட ஆண் குழந்தைகளின் பிறப்பு விகிதம்தான் அதிகம் என புள்ளிவிவரம் கூறுகிறது. இந்தப் புள்ளிவிவரம் ஒட்டுமொத்த இந்திய அளவிலானது. ஆனால் மாநில கணக்குகளின்படி இந்தப் பிறப்பு விகிதம் மாறுபடும். இந்தியாவில் பிறக்கும் குழந்தைகளில் அதிகம் பேர் ஆண்கள்தான் என்றாலும் தத்தெடுக்கப்படும் குழந்தைகளில் அதிகம் பேர் பெண்களே என்று தெரியவந்துள்ளது. நாடளுமன்றத்தில் மகளிர் மற்றும் குழந்தைகள் வளர்ப்பு அமைச்சகம்தான் இந்தத் தரவுக்கான அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.
பொதுவாக பெற்றோர்கள் தங்களுக்கு ஆண் வாரிசே வேண்டும் என விரும்பினாலும் குழந்தை இல்லை என ஏங்கும் தம்பதிகள் இறுதி முடிவாக ஒரு குழந்தையை தத்தெடுக்க முடிவெடுக்கும்போது அவர்கள் ஆண் பிள்ளைகளைவிட பெண் பிள்ளைகளையே விரும்பி தத்தெடுத்துள்ளார்கள் என இந்த அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.
இந்தத் தரவுகளின்படி கடந்த 2015லிருந்து 2018 வரை நாட்டில் 11,649 குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் 6962 பேர் பெண் குழந்தைகள் எனத் தெரிகிறது.
ஆண்டு மொத்தம்
தத்தெடுக்கப்பட்டவர்கள் பெண்கள் எண்ணிக்கை
2015-16 3011 குழந்தைகள் 1855 குழந்தைகள்
2016-17 3210 குழந்தைகள் 1915 குழந்தைகள்
2017-18 3276 குழந்தைகள் 1943 குழந்தைகள்
2018-19 2152 குழந்தைகள் 1249 குழந்தைகள்
என வெளியான தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தத் தரவுகளில் மூலம் மொத்தமாக 60 சதவிகிதம் பெண் குழந்தைகள் இந்த மூன்று ஆண்டுகள் தத்தெடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. அதேபோல, வெளிநாடுகளுக்கு தத்து கொடுக்கப்படும் குழந்தைகளில் 69% பேர் பெண் குழந்தைகள் எனத் தெரிய வந்துள்ளது. அதாவது வெளிநாடுகளுக்கு தத்து கொடுக்கப்பட்ட 2310 குழந்தைகளில் 1594 பேர் பெண் குழந்தைகள் என்று கூறப்பட்டுள்ளது.