டேராடூன்|100 கிமீ வேகத்தில் வந்த கார்..லாரி மீது மோதியதில் 3 பெண்கள் உட்பட 6 மாணவர்கள் பரிதாப மரணம்!

டேரடூனில் சுமார் 100 கி.மீ வேகத்தில் சென்ற கார், லாரியின் பின்புறத்தில் மோதியதில் காரில் இருந்த 3 பெண்கள் உட்பட மொத்தம் 6 பேர் உயிரிழந்த சம்பவம் அரங்கேறி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டேரடூன்
டேரடூன்முகநூல்
Published on

உத்தரகாண்ட் மாநிலம் டேரடூனில் சுமார் 100 கி.மீ வேகத்தில் சென்ற கார், லாரியின் பின்புறத்தில் மோதியதில் காரில் இருந்த 3 பெண்கள் உட்பட மொத்தம் 6 பேர் உயிரிழந்த சம்பவம் அரங்கேறி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 12 ஆம் தேதி அன்று, உத்தரகண்ட் மாநிலம் டேராடூன் அருகே, உள்ள சௌக் பகுதியில் உள்ள எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்துக்கு (ONGC) அருகே அதிகாலை 1.30 மணி அளவில் இன்னோவா கார் ஒன்று சுமார் 100 கி.மீ வேகத்தில் வந்துள்ளது.

அப்போது, அங்கிருந்த கண்டெய்னர் லாரியின் பின்புறத்தில் லாரி அதிவேகமாக மோதியுள்ளது. இதனால், கார் சுக்கு நூறாக நொறுங்கியது. இதனால், காரில் இருந்த 25 வயதுக்குட்பட்ட மூன்று ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் உட்பட ஆறுபேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.. உயிரிழந்தவர்கள் மாணவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இவர்களில் 5 பேர் டேராடூனையும், ஒருவர் சம்பாவை சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது. குணீத் சிங், 19, காமக்ஷி சிங்கால், 20, நவ்யா கோயல், 23, ரிஷப் ஜெயின், 24, மற்றும் அதுல் அகர்வால், 24, மற்றும் ஹிமாச்சலின் சம்பாவைச் சேர்ந்த குணால் குக்ரேஜா, 23, ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 25 வயதான சித்தேஷ் அகர்வால் என்ற அடையாளம் தெரியாத ஏழாவது நபர் மட்டும் படுகாயம் அடைந்த நிலையில், அருகிலிருந்த சினெர்ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டேரடூன்
விழுப்புரம்: ரூ. 6.5 கோடி மதிப்பிலான யானை தந்தத்தினால் ஆன பொம்மைகள் பறிமுதல்!

அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால், சம்பவம் குறித்தான எந்த தகவலையும் பெற முடியவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், ராஜ்பூர் சாலைகள், சஹாரன்பூர் சௌக், பல்லிவாலா மற்றும் பல்லுபூர் வழியாக கார் செல்லும்போது சாதாரண வேகத்தில்தான் செல்கிறது என்றும், ஓஎன்ஜிசி சந்திப்பை அடைந்தவுடன் கார் திடீரென வேகமாகச் சென்றதாகவும் கேமராவில் பதிவாகியுள்ளதாக காவல்துறையினர் தகவல் தெரிவிக்கின்றனர்.

மேலும், கண்டெய்னர் டிரக்கின் டிரைவரின் தவறு இதில் எதுவும் இல்லை என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. காரணம், அதிவேகமாக வந்த வாகனம் டிரக்கின் இடதுபுறமாக அதாவது blind point ல் வந்துள்ளது.

டேரடூன்
”முகலாய மன்னர் அவுரங்கசீப்பின் கொள்கைகளை காங்கிரஸ் பரப்புரை செய்கிறது” - பிரதமர் மோடி விமர்சனம்

மேலும், வாகனத்தை ஓட்டிச் சென்ற இளம் கார் உரிமையாளர் சம்பவத்தில் உயிரிழந்ததால், அவர் பொறுப்பேற்க முடியாது. இந்நிலையில், இந்த வழக்கில் சாத்தியமான நடவடிக்கைகளை ஆராய சட்ட நிபுணர்களுடன் போலீசார் ஆலோசனை நடத்தி வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com