கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்த குற்றச்சாட்டில் தெலங்கானாவில் மேலும் 6 மருத்துவமனைகளுக்கு சிகிச்சையளிக்க தடைவிதிக்கப்பட்டிருக்கிறது.
கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு அதிக கட்டணம் வசூலித்ததாகக் கூறி மேலும் ஆறு தனியார் மருத்துவமனைகள் சிகிச்சையளிக்க தெலங்கானா அரசு தடை விதித்துள்ளது. மேட்சலின் பத்மஜா, டி.எக்ஸ் மற்றும் லைஃப்லைன் மருத்துவமனைகள், வாரங்கல் நகரின் மேக்ஸ் கேர், லலிதா மருத்துவமனை மற்றும் சங்கரெட்டியின் ஸ்ரீ சாய் ராம் மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. தெலங்கானாவில் இதுவரை மொத்தம் 16 மருத்துவமனைகள் கொரோனா சிகிச்சையளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளன.