அசாம் மாநிலத்தில் அடுத்தடுத்து மூன்று நில அதிர்வுகள் ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர். 6.4 ரிக்டர் அளவிலான நில அதிர்வு மேகாலயா மற்றும் மேற்குவங்க மாநிலங்களிலும் உணரப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தினால் பல இடங்களில் கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சத்தில் வீடுகளுக்கு வெளியே தஞ்சமடைந்தனர், இதன் காரணமாக பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. வடக்கு கவுஹாத்தில் 17 கிலோமீட்டர் ஆழத்தில் அடுத்தடுத்து மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இதனிடையே நிலநடுக்கம் தொடர்பாக அசாம் முதலமைச்சரிடம் கேட்டறிந்ததாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, அசாமுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.