இந்தியாவில் 2 வயதுக்குட்பட்ட 6.4% குழந்தைகள் உணவு பற்றக்குறையுடன் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
விரிவான தேசிய ஊட்டசத்து கணக்கெடுப்பு சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது. இந்திய அளவில் உணவின்றி தவிக்கும் 6.4% குழந்தைகள் இருக்கும் நிலையில், குழந்தைகளுக்கு உணவளிக்கும் மாநிலங்களில் ஆந்திரப் பிரதேசம் முதலிடம் வகிக்கிறது. நாட்டிலேயே அங்கு தான் குறைந்தபட்சமாக 1.3% குழந்தைகள் உணவு பற்றாக்குறையுடன் உள்ளனர். அதேசமயம் அதிகபட்சமாக சிக்கிம் மாநிலத்தில் 35.9% குழந்தைகள் போதிய உணவில்லாமல் இருக்கின்றனர்.
இந்த வரிசையில் ஆந்திராவிற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிர மாநிலத்தில் 2.2% குழந்தைகளும், குஜராத், தெலங்கானா மற்றும் கர்நாடகாவில் தலா 3.6% குழந்தைகளும் உணவுப் பற்றாக்குறையுடன் உள்ளனர். இந்த மாநிலங்களுக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் 4.2% குழந்தைகள் போதிய உணவில்லாத நிலையில் வாழ்கின்றனர். நாட்டிலேயே அதிகபட்ச உணவுப் பற்றாக்குறை உள்ள மாநிலங்களின் வரிசையில் கேரளா 32.6 சதவிகிதத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
இதுதவிர மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள ஆய்வில், இந்திடியாவில் 5 வயதுக்குட்பட்ட 35% குழந்தைகள் வயதுக்கேற்ற வளர்ச்சி இல்லாமல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 17% குழந்தைகள் வளர்ச்சிக்கேற்ற எடையின்றி இருப்பதாகவும், 33% குழந்தைகள் வயதுக்கேற்ற எடையின்றி இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.