வங்கிகள் தேசியமயமாகி 50 ஆண்டுகள் நிறைவு 

வங்கிகள் தேசியமயமாகி 50 ஆண்டுகள் நிறைவு 
வங்கிகள் தேசியமயமாகி 50 ஆண்டுகள் நிறைவு 
Published on

வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டு இன்றுடன் 50 ஆண்டுகள் நிறைவடைகிறது. 

14 தனியார் வங்கிகள், தேசியமயமாக்கப்படுவதாக 1969ஆம் ஆண்டு பிரதமராக இருந்த இந்திரா காந்தி, ஜூலை 19ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு அறிவித்தார். அதைத் தொடர்ந்து, வங்கித் தொழில் நிறுவனங்கள் மசோதாவை அரசு தாக்கல் செய்து, குடியரசுத் தலைவருக்கு அனுப்‌பப்பட்டு ஒப்புதலும் பெறப்பட்டது. 

அப்போது, பேங்க் ஆப் பரோடா, பேங்க் ஆப் இந்தியா, கனரா வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளிட்ட 14 வங்கிகள் தே‌சியமயமாக்கப்பட்டன. அந்த ஆண்டில்தான் பல பெரிய நிறுவனங்களும் தேசியமயமாக்கப்பட்டன. இந்த நடவடிக்கைக்குப் பிறகுதான், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் செயல்பாடுகள், அனைவருக்கும் வங்கிச் சேவைகள் போன்றவை வங்கி துறையில் துளிர்விட ஆரம்பித்தன. 

இதன்பிறகு 1980ஆம் ஆண்டில் மேலும் 6 வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டன. வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்ட பிறகே ஏழை, எளிய மக்கள் வாழ்க்கைத் தரம் உயர கடன் வழங்குதல், விவசாயக் கடன்கள், மானியம் வழங்குதல், கல்விக் கடன்கள் போன்ற பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. 1969ஆம் ஆண்டு 14 வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்ட போது அவற்றின் லாபம் 5.7 கோடி ரூபாயாக இருந்தது. ஆனால் தற்போது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் மொத்த நஷ்டம் 49,700 கோடி ரூபாயாக இருப்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com