மகாராஷ்டிரா தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதற்கு முக்கிய 5 காரணங்கள் இதுதான்..!

மகாராஷ்டிரா தேர்தலில் பாஜக-வை வெற்றி பெறச் செய்த மிக முக்கியக் காரணங்களாக 5 காரணங்கள் கூறப்படுகின்றன. அவற்றைப் பற்றி இங்கே காணலாம்.
புதியதலைமுறை லைவ்
புதியதலைமுறை லைவ் புதியதலைமுறை
Published on

என்னதான் தமிழ்நட்டில் கொடுக்கப்படும் நலத்திட்ட உதவிகளையும் இலவசங்களையும் ‘ரேவடி கல்ச்சர்’ என்றும் ‘இலவசங்கள் கொடுக்ககூடாது’ என்றும் கூறி, தொடர்ந்து விமர்சித்து வந்தாலும் தேர்தல் நேரங்களின்போது இலவசங்களை வாரி வழங்குவதாக வாக்குறுதிகளை வழங்குவதற்கு ஒருநாளும் மோடி தலைமையிலான பாஜக அரசு தவறுவதில்லை.

மகாராஷ்டிர தேர்தலிலும் பாஜக-வை வெற்றி பெறச் செய்வதற்கு அப்படியான இலவசங்களும் ஒரு முக்கியக் காரணமாக கூறப்படுகிறது.

மகாராஷ்ட்ரா
மகாராஷ்ட்ராகோப்புப்படம்

இந்த வகையில், பாஜக மகாராஷ்டிராவில் எதிர்பாராத பெரும் வெற்றி பெறுவதற்கு முக்கியகக் காரணங்களாக இருக்கும் ஐந்து விஷயங்களை, இங்கே பார்க்கலாம்...

1. மகளிர் உதவித்தொகை திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டு மகளிர் வங்கி கணக்கில் மாதம் 1,500 ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது

2. ஒற்றுமையாக இருந்தால் பத்திரமாக இருப்போம் என மறைமுகமாக பிரதமர் நரேந்திர மோடி "ஹிந்துத்வா" பிரசாரம் செய்தது வெற்றிக்கு உதவியுள்ளது. உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், “ஒற்றுமையாக இல்லாவிட்டால் பாதிக்கப்படுவோம்” என பிரச்சாரம் செய்ததும் உதவியுள்ளது.

புதியதலைமுறை லைவ்
🔴LIVE | மகாராஷ்ட்ரா, ஜார்க்கண்ட் வாக்கு எண்ணிக்கை - பாஜக Vs காங்கிரஸ்... எங்கே யார் முன்னிலை?

3. விவசாயிகள் கோரிக்கையை மஹாயூதி கனிவுடன் பரிசீலித்து நடவடிக்கை எடுத்தது, வெங்காயம் ஏற்றுமதி அனுமதி, அதிக ஈரப்பதமுள்ள சோயாபீன் கொள்முதலுக்கு அனுமதி மற்றும் பருத்தி விவசாயிகளுக்கு இழப்பீடு ஆகியவை கைகொடுத்துள்ளன.

4. RSS முழுவீச்சாக பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டியது உதவியுள்ளது

5. முதல்வர் ஏக்நாத் ஷிண்டே இரவு-பகல் பாராமல் களப்பணிகளில் ஈடுபட்டதும் வெற்றிக்கு உதவியுள்ளது

இந்த ஐந்து காரணங்கள் எவ்வாறு உதவின என்பது குறித்து கீழ் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com