மருத்துவர்களைத் தனிமைப்படுத்த ஸ்டார் ஹோட்டல்கள் புக்கிங்!

மருத்துவர்களைத் தனிமைப்படுத்த ஸ்டார் ஹோட்டல்கள் புக்கிங்!
மருத்துவர்களைத் தனிமைப்படுத்த ஸ்டார் ஹோட்டல்கள் புக்கிங்!
Published on

கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களைத் தனிமைப்படுத்த டெல்லி மற்றும் உபி அரசு, நட்சத்திர ஹோட்டல்களில் அறைகளை முன்பதிவு செய்துள்ளன.

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மருத்துவர்களும், செவிலியர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரவு பகல் பாராமல் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா பரவக்கூடிய தொற்று என்பதால் மருத்துவர்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்கின்றனர். அப்படி மருத்துவர்களை தனிமைப்படுத்த டெல்லி மற்றும் உபி அரசு நட்சத்திர ஹோட்டல்களில் அறைகளை முன்பதிவு செய்துள்ளன.

டெல்லியின் லலித் என்ற சொகுசு ஹோட்டலில் டெல்லியைச் சேர்ந்த என்.எல்.ஜே.பி மற்றும் ஜிபி பந்த் மருத்துவமனை மருத்துவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதற்காக அரசு சார்பில் 100 அறைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

உத்தரப்பிரதேசத்தின் லக்னோவில் உள்ள ஃபேர் ஃபீல்டு, லெமன் ட்ரீ, ஹையாத் ஆகிய ஹோட்டல்களின் அறைகள் மருத்துவர்களுக்கும், மருத்துவ பணியாளர்களுக்கும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் ஹோட்டல் அறைகளில் தங்குவார்கள் என்றும், மொத்த செலவையும் அம்மாநில அரசே ஏற்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com