அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கை, உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று விசாரிக்க உள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராம ஜென்ம பூமி என்றழைக்கப்படும் இடத்துக்கு ராம்லீலா அமைப்பு, சன்னி வக்பு வாரியம், நிரிமோஷி அக்ஹாரா அமைப்பு ஆகியவை உரிமை கொண்டாடி வருகின்றன. சர்ச்சைக்குரிய 2 புள்ளி 77 ஏக்கர் வழிபாட்டு நிலம் யாருக்கும் சொந்தம் என்பது குறித்த இவ்வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், மூன்று அமைப்புகளும் சரிசமமாக பகிர்ந்து கொள்ளுமாறு தீர்ப்பளித்திருந்தது.
அதனை ஏற்காத மூன்று அமைப்புகளும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்னன. இவ்வழக்கு மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் இன்று விசாரணைக்கு வருகிறது. இந்த அமர்வில், நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே, என்.வி.ரமணா, யு.யு.லலித், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் இடம்பெறுகின்றனர்.