பனிச்சரிவில் சிக்கியுள்ள ராணுவ வீரர்கள் ! தாமதமாகும் மீட்பு

பனிச்சரிவில் சிக்கியுள்ள ராணுவ வீரர்கள் ! தாமதமாகும் மீட்பு

பனிச்சரிவில் சிக்கியுள்ள ராணுவ வீரர்கள் ! தாமதமாகும் மீட்பு
Published on

இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கியுள்ள ராணுவ வீரர்கள் 5 பேர் 24 மணி நேரமாகியும் மீட்கப்படவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இமாச்சல பிரதேசத்தின் ஷிப்கிலா எல்லை பகுதியிலுள்ள தண்ணீர் குழாயை சரி செய்ய 16 ராணுவ வீரர்கள் சென்றனர். அப்போது அந்தப் பகுதியில் பனிச்சரிவு ஏற்பட்டது. இந்தப் பனிச்சரிவுடன் பலத்த மழையும் பெய்தது. அங்கு நேற்று ஒருநாளில் மட்டும் 5 அங்குல அளவிற்கு பனிப்பொழிவு ஏற்பட்டது. இந்தப் பனிச்சரிவில் சிக்கிய ராணுவ வீரர் ராகேஷ் குமார் இறந்தார். அவர் இமாச்சல பிரதேசத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்.

இந்நிலையில் இவருடன் இந்தப் பனிச்சரிவில் சிக்கிய 5 ராணுவ வீரர்கள் 24 நேரமாகியும் இன்னும் மீட்கப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த ராணுவ வீரர்கள் அனைவரும் 7ஜேஏகே ரைபில் குழுவை சேர்ந்தவர்கள்.

பனிச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ராணுவமும் இந்திய-திபெத் எல்லை பாதுகாப்பு படையினரும் ஈடுபட்டுள்ளனர். அங்கு நிலவும் கடுமையான வானிலை சூழலால் மீட்புப் பணிகளில் பாதிப்பு ஏற்படுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷிப்கிலா பகுதி நிலத்தடியிலிருந்து 13,000 அடி உயரத்திலுள்ளது. அத்துடன் இந்தப் பகுதி இந்தியா-சீனா எல்லை பகுதியில் உள்ளது. இந்த இடம் இமாச்சல பிரதேசத்தின் தலைநகரமான சிம்லாவிலிருந்து 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மேலும் இமாச்சல பிரதேசத்தில் இன்னும் 24 மணி நேரத்திற்கு பலத்த மழை மற்றும் பனிப்பொழிவு தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com