அதிகாலையில் 4ஜி செம்ம ஸ்பீடு ! ஆய்வில் தகவல்

அதிகாலையில் 4ஜி செம்ம ஸ்பீடு ! ஆய்வில் தகவல்
அதிகாலையில் 4ஜி செம்ம ஸ்பீடு ! ஆய்வில் தகவல்
Published on

இந்தியாவில் 4ஜி டவுன்லோடு வேகம் அதிகாலை 4 மணியளவில் சிறப்பாக இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

இப்போது பெரும்பாலானவர்களின் கைகளில் ஸ்மார்ட்போன்கள் இருக்கின்றன. அப்படி ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் பாடல் கேட்பது, வீடியோ பார்ப்பது என பலவற்றிற்கும் இணைய சேவையை பயன்படுத்துகின்றனர். சிலரோ 4ஜி நெட் இருந்தும் இணைய வேகம் குறைவாக இருக்கிறது என சில நேரங்களில் புலம்புவதை கேள்விப்பட்டிருப்போம்.

இந்நிலையில் இந்தியாவில் 4ஜி டவுன்லோடு வேகம் காலை 4 மணியளவில் சிறப்பாக இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. உலகளவில் இணைய வேகத்தை கணிக்கும் நிறுவனமான ஓபன்சிக்னல், இதற்கான ஆய்வில் இறங்கியிருக்கிறது. இந்தியாவின் 20 முக்கிய நகரங்களில் இணையவேகத்தை ஆய்வு செய்ததில் 4ஜி டவுன்லோடு வேகம் அதிகாலை 4 மணியளவில் சிறப்பாக இருப்பது தெரியவந்துள்ளது. இரவு 10 மணியளவில் தான் ஸ்மார்ட்போன் பயனாளர்கள் மிகக் குறைந்த அளவிலான டவுன்லோடு வேகத்தை பெறுவது தெரியவந்துள்ளது. இரவு நேரங்களில் 4.5 மடங்கு அதிகப்படியான டவுன்லோடு வேகம் இருப்பதகாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவி மும்பையில் தான் அதிகப்படியாக 8.1 Mbps சராசரி டவுன்லோடு வேகம் கிடைப்பதாகவும், அலகாபாத்தில் மிகக் குறைந்தப்பட்சமாக 4.0 Mbps  சராசரி டவுன்லோடு வேகம் இருப்பதும் தெரியவந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com