பள்ளிப் பேருந்து தலைகீழாக கவிழ்ந்ததில் ஒருவர் பலியானார். சுமார் 45 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். இதில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் இருந்து 45 மாணவ, மாணவிகள் கல்விச் சுற்றுலா புறப்பட்டனர். ஆக்ராவிலுள்ள யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் ஜர்னா நலா என்ற இடத்தில் பேருந்து வந்துகொண்டிருந்த போது பேருந்தின் டயர் திடீரென்று வெடித்தது. இதையடுத்து கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தலைக்கிழாகக் கவிழ்ந்தது. இதில் பேருந்தில் பயணம் செய்த மாணவர்கள் அனைவரும் காயமடைந்தனர். சிலர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து போலீசார் மற்றும் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவர்கள் மீட்கப்பட்டனர். படுகாயமடைந்தவர்கள் ஆக்ரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சிகிச்சைப் பெற்றுவந்த ஒருவர் பலியானார். மேலும் 5 பேரின் நிலைமைக் கவலைக்கிடமாக உள்ளது.