40 நாட்களே ஆன பிஞ்சு குழந்தையின் மூக்கை கடித்த எலி.. சிகிச்சைப் பலனின்றி ஏற்பட்ட துயரம்

தெலங்கானா: பிறந்து 40 நாட்களே ஆன குழந்தையின் மூக்கை எலி கடித்ததால் சிகிச்சைப் பலனின்றி குழந்தை உயிரிழந்த விவகாரம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த குழந்தை
உயிரிழந்த குழந்தைபுதியதலைமுறை
Published on

தெலங்கானா மாநிலம் நாகர் கர்நூல் மாவட்டத்தில் உள்ள நாகனூல் கிராமத்தை சேர்ந்த தம்பதியர், சிவா - லட்சுமி கலா. திருமணமாகி மூன்று ஆண்டுகள் கடந்த இவர்களுக்கு, 40 நாட்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் குழந்தையுடன் லட்சுமி கலா தன் தாய் வீட்டில் வசித்து வந்தார். மூன்று நாட்களுக்கு முன்பாக வீட்டில் இருந்த அந்த குழந்தையின் மூக்கை எலி கடித்துள்ளது. அதனைத் தொடர்ந்து உள்ளூரில் உள்ள மருத்துவமனையில் குழந்தைக்கு சிகிச்சை பெற்ற லட்சுமி கலா, தாய் வீட்டிலேயே தொடர்ந்து தங்கி இருந்தார்.

இந்நிலையில் குழந்தையின் மூக்கை எலி மீண்டும் கடித்ததாக கூறப்படுகிறது. இதனால் குழந்தை மூக்கில் இருந்து ரத்தம் தொடர்ந்து சொட்டியுள்ளது. இதையடுத்து குழந்தையை சிகிச்சைக்காக நாகர் கர்னூலில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், தீவிர சிகிச்சைக்காக ஹைதராபாத்திற்கு அழைத்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.

குழந்தையை ஹைதராபாத்தில் உள்ள நீலோபர் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்ற பெற்றோர், அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால், சிகிச்சைப் பலனின்றி குழந்தை இறந்தது. எலி கடித்து பிறந்து 40 நாள்களேயான குழந்தை மரணம் அடைந்த சம்பவம், குடும்பத்தினரிடமும் அப்பகுதி மக்களிடையேவும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

உயிரிழந்த குழந்தை
மல்யுத்தம்: தொடரும் பிரச்னைகள்.. திடீரென கலைத்த மத்திய அரசு.. குற்றஞ்சாட்டும் பிரியங்கா காந்தி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com