மும்பையில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்திற்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்.
நான்குமாடி கட்டிடம் என்பதாலும் மிக குறுகலான பகுதி என்பதாலும் மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இயந்திரங்களையும் மீட்பு வாகனங்களையும் கொண்டு செல்ல முடியாத சூழ்நிலை நிலவுகிறது. இதனால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
100 ஆண்டுகள் பழைய கட்டடம் என்பதால் தொடர் மழைக்கு தாங்காமல் இடிந்து விழுந்திருக்கலாம் என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அருகில் உள்ள மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் சம்பவ இடத்திற்கே சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மகாராஷ்டிரா முதலமைச்சர் பட்னாவிஸ், மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.