மாவோயிஸ்ட் உடலை ஊருக்குள் புதைக்க பொதுமக்கள் அனுமதி மறுப்பு

மாவோயிஸ்ட் உடலை ஊருக்குள் புதைக்க பொதுமக்கள் அனுமதி மறுப்பு
மாவோயிஸ்ட் உடலை ஊருக்குள் புதைக்க பொதுமக்கள் அனுமதி மறுப்பு
Published on

கேரளாவில் சுட்டுக்கொல்லப்பட்ட சேலத்தை சேர்ந்த மாவோயிஸ்ட் உடலை ஊருக்குள் புதைக்க அனுமதிக்கக்கூடாது என்று கூறி, ஊர் மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

சேலம் காடையாம்பட்டி பகுதியை சேர்ந்த மணிவாசகம் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே மாவோயிஸ்ட் இயக்கத்தில் இணைந்து தலைவராக செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 29-ம் தேதி கேரளா வனப்பகுதியில் மணிவாசகம் சுட்டுக்கொல்லப்பட்டார். பின்னர் மணிவாசகத்தின் சொந்த ஊரான ராமமூர்த்தி நகர் பகுதியில் அவர் உடலை அடக்கம் செய்ய அவரது உறவினர்கள் முயற்சிகள் மேற்கொண்டனர்.

இந்தநிலையில் ஊர்மக்கள், மணிவாசகத்தின் உடலை ஊருக்குள் புதைக்க அனுமதிக்கக் கூடாது என்று ஊர் மக்கள் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினர். மேலும் அவரின் உடல் ஊருக்குள் புதைக்கப்பட்டால் நினைவேந்தல் நிகழ்ச்சி என்ற பெயரில் ஆண்டுதோறும் மாவோயிஸ்டுகள் வரக்கூடும் என்றும் ,இதனால் ஊரில் உள்ள இளைஞர்களை மூளைச்சலவை செய்து, தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல வாய்ப்பு உள்ளதால் அவர் உடலை ஊருக்குள் புதைக்கக் கூடாது என்று மனு அளித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com